கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
14.7.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பொது சிவில் சட்டத்தில் இருந்து அருணாச்சல பிரதேச மக்களுக்கு விலக்கு அளித்திட வேண்டும் என 26 பழங்குடி அமைப்புகள் மோடி அரசின் சட்ட ஆணையத்துக்கு கடிதம்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* இந்தியாவின் ஒற்றுமை, முன்னேற்றத்துக்கு ஊறுவிளைவிக்கும் பொது சிவில் சட்டத்தை கைவிட வேண்டும். ஒரே அளவு அனைவருக்கும் பொருந்தாது என இந்திய சட்ட ஆணைய தலைவர் ரிதுராஜ் அவஸ் திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
* 2024 பொதுத் தேர்தல் முன்னேற்பாடாக திமுக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் உரையாட முடிவு.
தி இந்து:
* எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத் தில் இருந்து மறு உத்தரவு வரும் வரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரது எதிர்ப்பு குரலால் பின்வாங்கியது.
– குடந்தை கருணா