ஊழல் குறைந்த உலக நாடுகள் பட்டியலில் 96ஆம் இடத்தில் இந்தியா

viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப்.12 கடந்த 1995 முதல் ஆண்டுதோறும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலை அரசுத் துறையில் நிலவும் ஊழல் குறித்து தொழில் வல்லுநர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து வெளியிட்டு வருகின்றனர்.

96ஆம் இடத்தில் இந்தியா

தற்போது வெளியாகி உள்ள 2024-ஆம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு குறியீடு (சி.பி.அய்.) பட்டியலில் இந்தியா 96-ஆவது இடத்தைப் பிடித்து உள்ளது. இண்டஹ அமைப்பு வல்லுநர்கள் மற்றும் வணிகர்களின் கூற்றுப்படி, பொதுத்துறை ஊழலின் அளவை மதிப்பிட்டு அதன்படி 180 நாடுகளின் நிலவரம் தரவரிசைப்படுத்தப்பட்டது.

இந்த நாடுகளுக்கு சுழியம் முதல் 100 வரையிலான மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. இவற்றில் ‘சுழியம்’ என்பது மிகவும் ஊழல் நிறைந்ததாகவும், ‘100’ என்பது ஊழலற்ற நிர்வாகத்தையும் குறிப்பதாகும். அந்த வகையில் இந்த பட்டியலில், 180 நாடுகளில் இந்தியா 96-ஆவது இடத்தில் உள்ளது..

இப்பட்டியலில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான்-135ஆவது இடம் மற்றும் இலங்கை 121-ஆவது இடம் பெற்று உள்ளன. மேலும் வங்காளதேசத்தின் தரவரிசை 149 ஆக பின்தங்கி உள்ள நிலையில் சீனா 76-ஆவது இடத்தைப் பிடித்து உள்ளது.

டென்மார்க் முதலிடம்

உலக அளவில் ஊழல் குறைந்த நாடாக பட்டியலில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் முறையே பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *