மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் உள்ளூர் எழுத்தாளர்களை கவரவிக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த திராவிடர் இயக்க எழுத்தாளர்கள் கி.தளபதிராஜ், ஞான.வள்ளுவன் ஆகியோரைப் பாராட்டி சால்வை அணிவித்து பட்டயம், புத்தகம் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், மாவட்ட கழகத் தலைவர் கடவாசல் குணசேகரன், நகர தலைவர் பூ.சி காமராஜ், செயலாளர்
சீனி.முத்து, ஒன்றிய செயலாளர் அ.சாமிதுரை, சீர்காழி ஒன்றிய தலைவர் ஆ.சந்திரசேகரன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் தி.சபாபதி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்
இரெ.செல்லதுரை, செயலாளர் தங்க.செல்வராஜ், விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் ஜெகன்.சாமிக்கண்ணு, வைத்தீசுவரன்கோயில் கழகத் தலைவர் அ.முத்தையன் மற்றும் கழக, தோழமை இயக்கத் தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.