தமிழ்நாட்டினை 2030-க்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தல்

2 Min Read

சென்னை,பிப்.12- தமிழ்நாட்டினை 2030-க்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

விழிப்புணர்வு கூட்டம்

கொத்தடிமைத் தொழிலாளர் முறை யினை முற்றிலும் ஒழித்திடவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழி லாளர் இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும், மாநில அளவிலான கொத் தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை, தியாகராயர் நகரில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்  சி.வெ.கணேசன் தலைமை யில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத் தினை துவக்கி வைத்து, கொத்தடிமைத் தொழி லாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியினை அமைச்சர் முன்னிலையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

கொத்தடிமை தொழிலாளர் முறை

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கணேசன் பேசும்போது கூறியதாவது:
தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட நமது தமிழ் நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி கொத்தடிமை தொழி லாளர் முறையை முற்றிலு மாக ஒழிக்க வேண்டும் என்ற சீரிய முயற்சியுடன், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு, உடனடி நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
அவ்வகையில், இந்த அரசு பொறுப்பேற்றது முதல், 570 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மீட்கப் பட்டு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.1 கோடியே 89 இலட்சத்து 40 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கு தண்டனையில் முடிவுற்ற பின்னர், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலா ளர்களில் ஆண் தொழி லாளர்களுக்கு ரூ.1 இலட்சம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரூ.2 இலட்சம் மற்றும் இதர சிறப்புப் பிரிவு தொழிலாளர்களுக்கு ரூ.3 இலட்சம் இறுதி நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது.

மேலும் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்தும் நோக்கில், பல்வேறு துறைகளின் வாயிலாக மறுவாழ்வு நடவடிக்கைகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ் நாட்டினை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற முதல மைச்சர் அவர்களின் நோக்கத்தினை நிறை வேற்றும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நாடகம்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் குறு நாடகம் நடைபெற்றது.
2023-2024ஆம் ஆண்டில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் சிறப்பாக பணிபுரிந்த சென்னை, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி.ஜெயலட்சுமி, சேலம் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதர துணை இயக்குநர் இலக்கியா, மற்றும் வருவாய் கோட்டாச்சியர் திருமதி.க்யூரி மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வம் ஆகியோருக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *