செய்திச் சுருக்கம்

Viduthalai
2 Min Read

மாநிலங்களவையில் தமிழ்நாடு உறுப்பினர்கள்
6 பேரின் பதவிக்காலம் முடிகிறது

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்ட மாநிலங்கள் அவையின் தரவுப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ், தி.மு.க.வின் எம்.சண்முகம், பி.வில்சன் மற்றும் ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு.க.வின் என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து மாநிலங்களவையில் தமிழ்நாடு உறுப்பினர்களின் எண்ணிக்கை 18ஆக உள்ளது. இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு பதவியேற்றுக் கொண்ட 6 பேரின் பதவிக்காலம் வருகின்ற 24.7.2025ஆம் ஆண்டு முடிவடைகிறது.

ஆளில்லா விண்கல சோதனைக்குப் பிறகு
மனிதனை அனுப்ப நடவடிக்கை
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது. முதற்கட்டமாக ஆளில்லா விண் கலத்தை அனுப்பி சோதனை செய்யப்பட உள்ளது. அதன்பின் மனிதனை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொறியியல் பிரிவுகளில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு இஸ்ரோவில் வேலைவாய்ப்புகள் உள்ளன. பி.எஸ்சி., இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன என இஸ்ரோ துணை இயக்குநர் கிரகதுரை தெரிவித்துள்ளார்.

பெண் நடத்துநருக்கான
பணிக்கு உயரம் குறைப்பு

செய்திச் சுருக்கம்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பெண் நடத்துநருக்கான உடல் தகுதியில் உயரம் குறைக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணை:
போக்குவரத்துத் துறைத் தலைவர் அலுவலகத்தின் கோரிக்கையை அரசு பரிசீலித்தது. இதன்படி ஆண் நடத்துநருக்கான குறைந்தபட்ச உயரம் 160 செ.மீ., பெண் நடத்துநருக்கான உயரம் 150 செ.மீ., இரு பாலினத்தவருக்கும் குறைந்தபட்ச எடை 45 கிலோ என பொது சேவை விதிகளில் வரையறுக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

குடற்புழு நீக்க மாத்திரை வழங்க வேண்டும்
குடற்புழு நீக்க மாத்திரை அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகள் அங்கன்வாடிகளில் வழங்கப்படுகிறது. மேலும் இளைஞர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்படுகிறது. சென்னையை பொருத்தவரை மாநகராட்சி சுகாதாரத் துறை உதவியுடன் அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகிறது. போதுமான மாத்திரைகள் வைத்திருக்க வேண்டும் என மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த குடற்புழு நீக்க மாத்திரை அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *