புறம்போக்கு நிலத்தில் வாழும் 86 ஆயிரம் பேருக்கு
6 மாதங்களில் பட்டா வழங்கப்படும்!
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
சென்னை, பிப்.11– தமிழ்நாடுஅமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.2.2025) நடை பெற்றது. அதில் புறம்போக்கு நிலத்தில் வாழும் 86 ஆயிரம் பேருக்கு ஆறு மாதங்களில் பட்டா வழங்கி 63 ஆண்டு பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
நேற்று (10.02.2025) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டபின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:–
சென்னையை சுற்றியிருக்கக்கூடிய…
முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப் பெரிய புரட்சியை செய்திருக்கிறார். அந்த புரட்சி என்னவென்று சொன்னால்,சென்னையை சுற்றியிருக்கக் கூடிய 4 மாவட்டங்களில், பெல்ட் ஏரியா பகுதிகளில் இருக்கக்கூடிய 32 கிலோ மீட்டரில் குடியிருப்ப வர்கள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட நெடுங்காலமாக குடியி ருப்பவர்கள் பட்டா பெறமுடியாமல் சிரமப்படுவதும், அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்யமுடியாமல் இருப்பதும் நம்முடைய முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குச் சென்றதின் விளைவாக இன்றைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னையை சுற்றியிருக்கக்கூடியஅந்த நான்கு மாவட்டங்களில் வசிக்கக்கூடிய பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று சொல்லி முதலமைச்சர் அவர்கள் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்திருக்கிறார்கள்.
6 மாதத்தில் வழங்க முடிவு
முடிவு செய்த நேரத்தில், சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதியில்குடியிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அந்த பட்டா வழங்குவதற்கான பணி களை ஆறு மாத காலத்திற்குள் முடித்துக்கொடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த பெல்ட் ஏரியா சட்டம் 1962 இல் வந்தது.
1962-லிருந்து 2025 வரை அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் மிகத் தெளிவாக ஒரு முடிவெடுத்து ஆறு மாதத்திற்குள் பட்டாவழங்கவேண்டும் என்று ஆணை யிட்டது மட்டுமல்லாமல், மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்தப் பணிகளை துவங்கி ஆறு மாத காலத்திற்குள்ளாக முடிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டிருக்கிறார்கள். அந்தப்பணிகளை நாங்கள் செய்ய விருக்கிறோம். சென்னையை சுற்றியி ருக்கக்கூடிய 4மாவட்ட மக்களுக்கும், மிகப் பெரிய வாய்ப்பாக இது அமைய விருக்கிறது.
86 ஆயிரம் பேருக்கு பட்டா!
மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளிலும் இதே போல பிரச்சினையிருக்கிறது. அங்கே இருப்பவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, மாநக ராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரில் இருக்கக்கூடிய பகுதிகளுக்கெல்லாம் சேர்ந்து மொத்தம் 57,054 பேர் ஆட்சே பனையற்ற புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற அந்த உத்தர வையும் முதலமைச்சர் அவர்கள் வழங்கி யிருக்கிறார்.
ஏறத்தாழ 86,000 பேருக்கு பட்டா வழங்குகின்ற அந்த தீர்மானத்தின்படி ஆறு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என்று இன்றைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்கள். 86,000 பேர் போக இன்னும் விடுபட்டிருந்து மனுக்கள் வரும் என்றுசொன்னால், அதையும் பரிசீலனைசெய்யுங்கள் என்று முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்கள். 1962-லிருந்து 2025-வரை உள்ள பிரச்சினையைத் தீர்த்து இன்றைக்கு இந்த முடிவு செய்திருக்கிறார்.
6 மாதத்திற்குள்ளாக
முதலமைச்சர் தலைமையில், ஆட்சி வந்த பிறகு, இதுவரை பத்து இலட்சத்து இருபத்தி ஆறாயிரம் பேருக்கு நாங்கள் பட்டா வழங்கி இருக்கிறோம். முதலமைச்சர் இன்னும் கொஞ்சம் விரைவுப்படுத்தி, வரும் ஆறு மாதத்திற்குள்ளாக ஆறு இலட்சத்து இருபத்தி ஒன்பதாயிரம் பேருக்கு பட்டா வழங்குகின்ற அந்தப் பணியையும் செய்து கொண்டிருக்கிறோம்.
பொதுவாக கலைஞர் வழியில் முதலமைச்சர் ஒரு தனி மனிதனுக்கு குடியிருப்பதற்கு இடமோ, வீடோ இல்லாமல் இருக்கக்கூடாது என்று அந்த உணர்வோடு ஒவ்வொரு காரி யத்தையும்செய்து கொண்டிருக்கிறார். இன்றைக்கு இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த பெல்ட் ஏரியாவிற்கு என்று எடுக்கப்பட்ட முடிவு மிகப் பெரிய அரசியல் வரலாற்று திருப்பமாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் பேட்டியளித்தார்.