பெங்களூரு, பிப்.10 இன்ஃபோசிஸ் மைசூர் அலுவலகத்திலிருந்து சுமார் 700 ஊழியர்கள், செக்யூரிட்டி மூலம் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டி ருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் அடிப்படை பயிற்சி பெற்று வந்ததாகவும், ஆனால் மூன்று முயற்சி களுக்கு பின்னரும்கூட உள்நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறி இந்த பணி நீக்கம் நடந்திருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நுட்ப நிறுவனமாக இன்ஃபோசிஸ் இருந்து வருகிறது. நிறுவனம் சார்பில் வளாக நேர்காணல் மூலம் வேலைக்கு பலர் எடுக்கப்பட்டிருந்தனர்.
இவர் களுக்கு மைசூரு வளாகத்தில் வைத்து அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு உள்நுழைவுத் தேர்வும் நடத்தப்பட்டிருக்கிறது. மொத்தம் 3 வாய்ப்புகள் வழங்கப் பட்டிருக்கின்றன. இதில் ஒன்றில் தேர்ச்சி பெற்றுவிட்டால்கூட பணியில் தொடர முடியும். ஆனால் தற்போது வெளியேற்றப்பட்டவர்கள் 3 வாய்ப்புகளிலும் தேர்ச்சி அடைய வில்லை. அதனால்தான் வெளியே அனுப்பிவிட்டோம் என்று நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆனால், இங்கு நடந்த விசயமே வேறு. இன்ஃபோசிஸ் நிறுவனம் பாதி உண்மையை மட்டும்தான் கூறு கிறது என அய்டி தொழிலாளர்கள் சங்கமான என்அய்டிஇஎஸ் (NITES) குற்றம்சாட்டியுள்ளது.
அதாவது, “நிறுவனம் சார்பில் வளாக நேர்காணல் மூலம் வேலைக்கு எடுக்கப்பட்டு தற்போது வெளியே அனுப்பப்பட்ட பலர் 2022 அணியை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 2 ஆண்டு களுக்கு பின்னர்தான், ஆண்டுக்கு ரூ.3.2-3.7 லட்சம் ஊதியம் வழங்கப்படும் என பணி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. 2023 அக்டோபரில்தான் இவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அதன் பிறகு நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று சொல்லி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று தொழிலாளர்கள் சங்கம் கூறியுள்ளது.