டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*தகுதியுடையோர் 9.4 கோடி; 9.7 கோடி பேர் மகாராட்டிரா தேர்தலில் வாக்களித்தது எப்படி? ராகுல் சரமாரி கேள்வி. தேர்தல் ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன் மகாராட்டிரா தேர்தலில் மெகா மோசடி: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் 3 ஆண்டாக நிறுத்தி வைத்தது ஏன்? மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைக்க அரசமைப்பு சட்டத்தில் வழிவகை உள்ளதா? – உச்ச நீதிமன்றம் கேள்வி மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்க வேண்டும் என உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உ.பி. கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தோருக்கு இறப்புச் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பு. குமுறுகிறார்கள் மக்கள்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘கைது செய்வதற்கான காரணங்களைத் தெரி விப்பது சம்பிரதாயம் அல்ல, ஆனால் கட்டாய அரசிய லமைப்புத் தேவை’ உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.
டெலிகிராப்:
* மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தியின் குற்றச் சாட்டுகளுக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு. பாஜக வினரே அவர்களது வெற்றியை நம்பவில்லை என கருத்து.
* உ.பி.யில் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் மாநில தேர்தலில் பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தலித்துகளும் ஒன்று படுவார்கள்: அகிலேஷ் நம்பிக்கை
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்கு குஜராத், பஞ்சாப் ஏஜெண்டுகள் ஒரு தனிநபருக்கு ரூ. 45-60 லட்சமும், ஒரு குடும்ப அலகுக்கு ரூ. 1-1.25 கோடியும் கட்டணம் வசூலிப்பு.
* டெல்லியில் பொது நிலத்தில் உள்ள அங்கீகரிக்கப் படாத 249 மதக் கட்டமைப்புகளையும் அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிக்கை அளித்திட அதற்காக அமைக்கப்பட்ட குழுவுக்கு டில்லி உயர்நீதிமன்றம் கட்டளை.
* ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் நடைபெறும் ஊழல் குறித்து தனது குற்றச்சாட்டு தொடர்பாக தனது தொலைபேசி ஒட்டுக்கேட்பு நடத்தியதாக அரசு மீது ராஜஸ்தான் அமைச்சர் கிரோரி லால் மீனா குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா