நீடாமங்கலத்தில் வே.மதிமாறன் பேச்சு
நீடாமங்கலம், பிப். 7- நீடாமங் கலம் பெரியார் படிப்பகத்தின் இரண்டாம் தளத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 26.01.2025 அன்று மாலை 5.30 மணி அளவில் சிந்தனைக்களம் மாதாந்திர தொடர் சொற்பொழிவு நிகழ்வின் தொடக்க நிகழ்ச்சி நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட கழகச் செயலாளர் கோ.கணேசன் தலைமை வகித்தார். நீடாமங்கலம் நகரச் செயலாளர் வா.சரவணன் வர வேற்புரை ஆற்றினார். மாவட்டகழக அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், ஒன்றியத் தலைவர் . தங்க.பிச்சைக் கண்ணு, மன்னை ஒன்றியத் தலைவர். மு.தமிழ்ச்செல்வன், நீடாமங்கலம் நகரச் செயலாளர் கி.இராஜேந்திரன், நீடா ஒன்றியச் செயலாளர் சதா.அய்யப்பன், நீடா. நகர இளைஞரணித் தலைவர் இரா.அய்யப்பன், நகர பொறுப்பாளர்.சு.கவுதமன், பகுத்தறிவாளர் கழக ஒன்றியச் செயலாளர். க.முரளி, இளை ஞரணி மாவட்டத் தலை வர் க.இராஜேஷ்கண்ணன். ஆகி யோர் முன்னிலை வகித்தனர். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் தங்க. வீரமணி தொடக்க வுரை ஆற்றினார்.
திருக்குறளைப் பரப்பியர் யார்?
பெரியாரிய அம்பேத்கரிய எழுத்தாளர் வே.மதிமாறன் கலந்து கொண்டு. திராவிட இயக்கம் வளர்த்த தமிழுணர்வு என்ற தலைப்பில் உரையாற்றினார். பட்டி தொட்டி எங்கும் . இராமாயண, மகா பாரத நாடகங்களே நடைபெற்றன.
அதற்காகவே தமிழ் மன் னர்கள் தங்கள் செல்வங்களை வாரி வழங்கினார்கள். தமிழ் மக்களோடு எவ்வித தொடர்பும் அற்ற பஞ்ச பாண்டவர்களைப் பற்றியும், இராமனைப் பற்றியும் மக்கள் அனைவரும் அறிந்து வைத் திருந்தார்கள், ஆனால் தமிழர்களின் பண்டைய இலக்கியமான திருக்குறளைப் பற்றி யாருக்கும் தெரியாது. அப்படி இருந்த கால கட்டத்தில் திருக்குறள் மாநாடு நடத்தி திருக்குறளைப் புகழ்ந்து பேசி மக்களிடம் கொண்டு போய் சேர்த்தவர் பெரியார். திருக்குற ளைப் பாடத்திட்டத்தில் சேர்த்து, பேருந்தில் ஓட்டுநர் பின் பக்கம் ஒவ்வொரு குறள் எழுதி அது தமிழர் இலக்கியம் என்று தமிழருக்கு உணர்த்தியவர்கள் அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் ஆவர்.
குலத்தொழிலை வற்புறுத்தியவர் இராஜாஜி
அவ்வையார் படித்து இருந்தார் என் ஆயா படிக்கவில்லையே. அம்மா அப்பா படிக்கவில்லை நான் இன்று படிப்பதற்கும், பதவி பெறுவதற்கும் திராவிட இயக்கங்கள் மட்டும்தான் காரணம். தமிழறிஞர்கள் சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தனர். தமிழர்களில் 100க்கு 98 சதவீதத்தினர் கல்வி இல்லாததைப் பற்றி கவலைப்படாமல் இருந்தனர். கல்வி பெற வேண்டும் என்று சிந்தித்த ஒரு தலைவர் தந்தை பெரியார் அவர்கள். இராஜாஜி குலக்கல்வியை கொண்டு வந்து ஒரு கொத்தனார் வீட்டுப் பிள்ளை அதே வேலையையே பார்க்க வேண்டும், ஒரு துணி துவைப்பவர் பிள்ளை அதே வேலையையே பார்க்க வேண்டும் என்ற நிலையைக் கொண்டு வர நினைத்தார் அதற்கு தொழிற்கல்வி என்று பெயரும் கொடுத்தார். அதை முறியடித்து குலக்கல்வியை ஒழித்து இன்று அனைவரும் .கல்வி பெறுவதற்கு பெரியார்தானே காரணம்.
அறிவு நாணயம் எங்கே?
எல்லா தலைவர் களுக்கும் பின்னர் ஜாதி இருக்கிறது ,அந்தத் தலைவரை விமர்சித்தால் அந்த ஜாதி மக்களின் பகையை ஏற்க நேரிடும் என்று அந்தத் தலைவர்களை விமர்சிக்க அஞ்சுகின்றனர். ஆனால் பெரியாருக்குப் பின்னால் ஜாதி இல்லை பகுத்தறிவாளர்களே இருக்கின்றோம். அதனால் எங்கள் தலைவரை விமர்சித்தால் எங்கள் தலைவர் மொழியிலேயே பதில் சொல்லுவோம். பெரியாருக்கு எந்த ஒரு ஜாதிய பின்னணியும் இல்லை எனவே அனைவரும் விமர் சிக்கின்றனர். அவரை விமர்சிக்கும் சுதந்திரத்தைக் கொடுத்தவர். பெரியார். ஆனால் கொஞ்சமாவது அறிவு நாணயத்தோடு விமர்சிக்க வேண்டும். அவர் மனித விடு தலையை மட்டுமே சிந்தித்தார், மொழியை அறிவியல் நோக்கில் சிந்தித்தார். அதனால் தான் மொழி சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
அவரை விமர்சித்து விட்டு யார் வேண்டுமானாலும் மகிழலாம். ஆனால் அவர் இன்றி தமிழருக்கு மகிழ்ச்சி இல்லை உயர்வு இல்லை என்று நீண்ட கருத்துரை ஆற்றினார்.மாவட்ட துணைச்செயலாளர் வி.புட்பநாதன், வடுவூர் து.உலக நாதன், தன.ஆசையொளி. கோபால கிருஷ்ணன், மாணவர் கழகத் தோழர்கள் சி. பாலாஜி, இ.நிவாஸ், த.ராகேஸ், ச.சாருகான். க.முரளி, எஸ்.தீபக். செ.பிரகாஷ், ச.கிரிதரன், பா.கலையரசன், ம.பிரசாந்த், உதயநிதி, ம.சரண், ந.கோபாலகிருஷ்ணன், ச.அருள், ச.மனோஜ், ஜெயவேல், ஜீ.மகேஷ்குமார், ஜி.பகத்சிங், பா.ரூபன், சா.அம்பிகாபதி, நா. வினோத்கண்ணன், மா.குருநாதன், காசி.கூத்தரசன், ஆர்.எஸ்.கவுதமன், எம்.இந்திரஜித், கே.சுரேஷ்குமார், செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பக ஒன்றி யச் செயலாளர் க.முரளி நன்றி கூறினார்.