தமிழர் தலைவர் ஆசிரியர் காஞ்சிபுரத்தில் முழக்கம்!
காஞ்சிபுரம், பிப்.6 தந்தை பெரியாரின் தத்துவ தலைமகனாய் விளங்கிய அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில், அவர் செய்த முப்பெரும் சாதனைகளான தமிழ்நாடு பெயர் சூட்டல், சுயமரியாதைத் திருமணச் சட்டம், இரு மொழிக் கொள்கைகளை எந்தக் காலத்திலும் யாராலும் மாற்ற முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி கூறினார்.
3.2.2025 அறிஞர் அண்ணாவின் நினைவுநாளில், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்ற வருகை தந்த தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாலாஜாபாத்தில் வரவேற்பு!
வாலாஜாபாத் அருகில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா. குணசேகரன், வி.பன்னீர்செல்வம், ஊமை. ஜெயராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்
அரக்கோணம்
பு. எல்லப்பன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடி, மாநில இளைஞரணி துணைப் பொதுச்செயலாளர் மு.அருண்குமார், இராணிப்பேட்டை மாவட்ட கழகத் தலை வர் சு. லோகநாதன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கி.இளையவேள், துணைச் செயலாளர் ஆ.மோகன், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் செல்வம், மகளிரணித் தோழர் அ. ரேவதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.கோவிந்தராஜ், அறிவுவழி காணொலி அரும்பாக்கம் தாமோதரன், வாலாஜாபாத் திமுக ஒன்றிய செயலாளர் சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அசோக்குமார், அரிதாஸ், காங்கிரஸ் சிவகுமார், பாடகர் சம்பத்குமார் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர்.
காஞ்சிபுரத்தில்
தமிழர் தலைவருக்கு வரவேற்பு!
காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தின் அருகில், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் காஞ்சி கதிரவன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சந்துரு, மாமன்ற உறுப்பினர் கமலக்கண்ணன், செய்யாறு கழக மாவட்டத் தலைவர் இளங்கோவன், செய்யாறு நகர கழகத் தலைவர் காமராசன், செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கோவிந்தன், தோழர் கோவிந்தராஜ் மற்றும் தோழர்கள் வரவேற்பு முழக்கங்களுடன் வரவேற்றனர்.
அண்ணா நினைவு இல்லத்தில்
தமிழர் தலைவர்!
அறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பழைய நினைவுகளை எல்லாம் தோழர்களுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் பகிர்ந்து கொண்டார்.
தமிழர் தலைவருடன்
சட்டமன்ற உறுப்பினர்கள்!
பயணியர் தங்கும் விடுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தரும், திமுக மாணவரணிச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசனும் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வரவேற்றனர். எம்.எஸ். சுகுமார், சி.வி.எம்.அ.சேகரன், செவிலி மேடு மோகன், டி.ஏ.ஜி. பொய்யாமொழி, டி.ஏ.ஜே. எழிலன், மாமன்ற உறுப்பினர் பா. பிரவீண் குமார், தோழர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் தமிழர் தலைவரை வரவேற்று மகிழ்ந்தனர்.
திருடர்கள் ஜாக்கிரதை!
மாலை 6 மணியளவில், காமராஜர் சாலை தொண்டை மண்டல சமுதாயக் கூட்டத்தில், ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்ற தலைப்பிட்டு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, திருவள்ளுவரை, வள்ளலாரைக் காப்போம்! என்று முழங்கும் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் நன்றி!
காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ.முரளி கூட்டத்திற்கு தலைமை தாங்கி, தமிழர் தலைவர் ஆசிரியரின் கட்டளையை நிறைவேற்றவே நாங்கள் இருக்கின்றோம் என்றும் காஞ்சிபுரத்தில் சிறப்புக் கூட்டம் நடத்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்தும் தலைமை உரையாற்றினார்.
மாநகரத் தலைவர் வரவேற்புரை!
மாநகர கழகத் தலைவர் ந. சிதம்பரநாதன் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தொடக்கவுரை!
கழக சொற்பொழிவாளர் காஞ்சி கதிரவன், கூட்டத்தின் நோக்கங்களையும் தந்தை பெரியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர் தமிழர் தலைவரை பாராட்டிய கருத்துகள் குறித்தும் தமிழர் தலைவரின் சிறப்புகள் குறித்தும் உரையாற்றினார்.
கழக துணைப் பொதுச் செயலாளர் உரை!
திராவிடர் கழக மாநில துணை பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள், ஆர்எஸ்எஸ், பாஜகவினரின் ஒடுக்கப்பட்டோர் நலனுக்கு எதிராகவும் தமிழர் கல்விக்கு எதிராக செய்கின்ற சூழ்ச்சிகளை எல்லாம் எடுத்துக்காட்டி, யார் திருடர்கள் என்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் உரை!
காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணிச் செயலாளருமான வழக்குரைஞர் சி.வி.எம்.பி எழிலரசன், ‘‘யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து மாணவர் அமைப்புகளும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடத்துகின்ற போராட்டத்திற்கு ஆசிரியர் ஆலோசனை வழங்கி வழி அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று கேட்டு, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினுடைய பாசிச செயல்பாடுகள் குறித்தும், அவற்றை எதிர்த்து ‘திராவிட மாடல்’ அரசு நடத்தும் நம் முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
தமிழர் தலைவர் சிறப்புரை!
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் தந்தை பெரியாரின் தத்துவ தலைமகனாய் விளங்கிய அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில், அவர் செய்த முப்பெரும் சாதனைகளான தமிழ்நாடு பெயர் சூட்டல், சுயமரியாதைத் திருமணச் சட்டம், இரு மொழிக் கொள்கை ஆகியவை குறித்தும், இதை எந்த காலத்திலும் யாராலும் மாற்ற முடியாது என்றும், அண்ணாவுக்கும் – தந்தை பெரியாருக்கும் இருந்த கொள்கை உறவு குறித்தும், பழைய நினைவுகளைக் குறிப்பிட்டும் சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், செந்தமிழ்ச்செல்வர் சி.வி.எம். அண்ணாமலை அவர்களுடைய வழித்தோன்றலான காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் டில்லிக்குச் சென்று களம் காணவுள்ள அவருக்கு வாழ்த்தைச் சொல்லி, ‘‘திராவிடம் வெல்லும்; அதனை வரலாறு சொல்லும்!’’ என்று குறிப்பிட்டார்.
மேலும், திருவள்ளுவரையும் வள்ளலாரையும் இந்துத்துவா மயமாக்க, வர்ணாசிரம சனாதான சக்திகளாகச் செயல்படக்கூடிய ஆர்எஸ்எஸ், பிஜேபி கும்பல்களையும் ஆர்எஸ்எஸ் காரராகச் செயல்படுகின்ற தமிழ்நாட்டு ஆளுநருடைய செயல்பாடுகள் குறித்தும் திராவிட மாடல் அரசின் ஏற்றத்தாழ்வு இல்லாத, எல்லோருக்கும ் எல்லாமும் என்கின்ற சமத்துவத்தைச் சொல்கின்ற, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவங்களை எல்லாம் செயல்படுத்துவதைக் குறித்தும் உரையாற்றி மகிழ்ந்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், கழகக் காப்பாளர் டி.ஏ.ஜி அசோகன், பகுத்தறிவு கலைத்துறையின் மாநில தலைவர் மு. கலைவாணன், அறிவு வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் நாத்திகம் நாகராசன் ஆகியோரும் உரையாற்றினர். மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா. இளம்பரிதி நன்றி கூறினார்.
திரண்டு வந்த இயக்கத் தோழர்கள்!
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு இரா. குணசேகரன், வி.பன்னீர்செல்வம், ஊமை. ஜெயராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அரக்கோணம் பு. எல்லப்பன், கழக மாவட்ட செயலாளர் கி. இளையவேள், துணைச் செயலாளர் சீத்தாவரம் ஆ. மோகன், செய்யாறு மாவட்ட கழகத் தலைவர் அ.இளங்கோவன், செயலாளர் சுந்தர், இராணிப்பேட்டை மாவட்ட கழகத் தலைவர்
சு. லோகநாதன், செயலாளர் கோபி, சோழிங்கநல்லூர் கழக மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, செயலாளர் நரசிம்மன், திருவள்ளூர் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் மா. மணி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன், சோழிங்கநல்லூர் கழக மாவட்டக் காப்பாளர் வீரபத்திரன், தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, தாம்பரம் நாத்திகன், காஞ்சிபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் அ.வெ. சிறீதர், செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வெங்கட்ராமன், செயலாளர் கோவிந்தன், செய்யாறு கழகத் தலைவர் தி. காமராசன், காஞ்சி மாநகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பிரபாகரன், செயலாளர் சின்னதம்பி, திருத்தணி அறிவுச் செல்வன், இ. ரவிந்திரன், பல்லவர் மேடு சேகர், இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ராமு, காவேரிப்பாக்கம் பாண்டுரங்கன், வாலாஜா தமிழ்வாணன், மாவட்ட மகளிர் அணி ஆசிரியர் உஷா, உ.க. அறிவரசி, இராஜலட்சுமி மோகன், திராவிட செழியன், எல்அய்சி மணி, காஞ்சி அமுதன், எழுச்சிப் பாடகர் உலகஒளி, பழனி உள்ளிட்ட தோழர்கள்.
திமுக தோழர்கள்!
திராவிட முன்னேற்றக் கழக காஞ்சி மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், வெங்கடேசன், தசரதன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் வழக்குரைஞர் யுவராஜ், மாநில வர்த்தகர் அணி பொறுப்பாளர் வி.எஸ். இராமகிருஷ்ணன், கு. அருளானந்தம், குறள் அமிழ்தன், மருத்துவர் ஆறுமுகம், உள்ளிட்ட
பலர்.
விடுதலை சிறுத்தைகள்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மதி. ஆதவன், பாசறை செல்வராஜ், அசோக் குமார் உள்ளிட்ட பலர்!
பொதுவுைடமை இயக்கத்தினரும் –
மக்கள் மன்றத்தினரும்!
பொதுவுைடமை இயக்கத்தின் தோழர்கள் ஜே. கமலநாதன், பி.வி. சீனிவாசன், மக்கள் மன்றத்தின் தோழர்கள் ஜெசி, மகேஷ், மணிமேகலை உள்ளிட்ட தோழர்கள்.
வழக்குரைஞர்கள்!
மூத்த வழக்குரைஞர் அப்துல் ஹாக்கீம், வழக்குரைஞர் தமிழினியன், வழக்குரைஞர் பூ. ராஜி உள்ளிட்ட தோழர்களும் மதிமுக தோழர் சு. மகேஷ், தோழர் ரவிபாரதி, பாரதி விஜயன், தீ. கோபாலகிருஷ்ணன், ஏராளமான பொதுமக்களும் கூட்டத்தில் பங்கேற்றனர். நகரெங்கும் கழகக் கொடிகள் பறந்தன. தமிழர் தலைவரின் உரை காஞ்சி மாநகரில் நல்ல எழுச்சியை உண்டாக்கியது. இரவு 9.00 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.