100 நாள் வேலைத் திட்டத்தில்
ஒரு கோடிக்கும் மேலானோர் வேலை இழப்பு!
புதுடில்லி, பிப்.5 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நாடு முழுதும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மக்களவையில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கமலேஷ் பஸ்வான்
கூறியதாவது:
போலியான தகவல், கிராம பஞ்சாயத்தில் இருந்து இடம் பெயர்தல் போன்ற காரணங்களால், 2022 – 2023 நிதி யாண்டில் 86.17 லட்சம் தொழிலாளர்களும், 2023 – 2024 நிதியாண்டில் 68.86 லட்சம் தொழிலாளர்களும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு அட்டையைப் புதுப்பிப்பது மற்றும் நீக்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் மாநில அரசுகளிடம் சட்ட விதிகளை முறையாக பின்பற்ற அறி வுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான தொழிலாளர் யாரும் விடுபடக் கூடாது என்ற நோக்கில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிலையான செயல்திட்டம், அனைத்து மாநிலங்க ளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மோசடி களை தடுக்க அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.