அயோத்தி கால்வாயில் இளம்பெண் பிணம் ‘தாழ்த்தப்பட்டோர் விரோத பா.ஜ.க.’ என காங்கிரஸ் விமர்சனம்

1 Min Read

லக்னோ,பிப்.4- உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாழடைந்த கால்வாயி லிருந்து காயங்களுடன், ஆடைகள் இல்லாத நிலையில் 22 வயது தாழ்த்தப்பட்ட சமூக பெண்ணின் பிணம் கண்டெடுக்கப்பட்டது மாநிலத்தில் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
இளம் பெண் காணாமல் போனதாக பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய கிராமத்துக்கு அருகே உள்ள பாழடைந்த கால் வாயிலிருந்து அவருடைய உடல் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தரப்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
‘எங்களது மகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய உடலில் ஆழமான காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட் டிருந்ததோடு, அவருடைய இரு கண்களும் பறிக்கப் பட்டிருக்கின்றன.

இந்த விவகாரத்தில் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை’ என்று அந்த இளம்பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்தனா்.
இந்நிலையில், மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு விரோதமான ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அயோத்தியில் தாழ்த்தப்பட்ட பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

மகள் காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்தும், மூன்று நாள்களாக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது.

தொடரும் இது போன்ற கொடூர குற்றங்களால், நாட்டின் மற்றொரு மகளின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை குடும்பங்கள் இதுபோன்ற பாதிப்பைச் சந்திக்கப் போகின்றன என்ற அச்சம் எழுகிறது.

தாழ்த்தப்பட்டோருக்கு விரோத பாஜக ஆட்சியில், தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான வன்முறைகளும், அநீதியும், கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘இத்தகைய கொடூர சம்பவம் ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் வெட்கக்கேடான விஷயம். பாஜகவின் காட்டாட்சியில் தாழ்த்தப்பட்ட சமூக, பழங்குடியின மற்றும் பின்தங்கிய மக்களுக்கு எதிரான குற்றங்களைக் கவனிக்க யாரும் இல்லை. இதற்கு உத்தர பிரதேச அரசு சிறந்த உதாரணமாக உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *