ஒசூர், பிப். 4- ஒசூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் ஒசூர் பெரியார் தோட்டத்தில் 1.2.2025 அன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாநகர தலைவர் து.ரமேஷ் வரவேற்றார்.கூட்டத்தின் நோக்கவுரை பொதுக்குழு உறுப்பினர் நிகழ்தினார்.
தீர்மானங்கள்
ஒசூர் உள்ள வட்ட சாலையில் தந்தை பெரியார்க்கு புகழ் சேர்க்கும் விதமாக தந்தை பெரியார் சதுக்கம் என சாலைகள் சந்திக்கும் பகுதிக்கு பெயர் வைக்கும் நீண்டநாள் முயற்சியை உணர்ந்து இதற்கான வழிவகை செய்து தந்த கழக தலைவர் தமிழர்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், தீர்மானம் நிறைவேற்றிய ஒசூர் மாநகராட்சி, மேயர் எஸ்.ஏ. சத்யா,துணைமேயர் சி.ஆனந்தையா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், இந்த தீர்மானத்தை அரசு ஆணையாக வெளியிட்டு பெயர்ப்பலகை நிறுவிட உத்திர விட்ட திராவிட மாடல் அரசு நடத்தும் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும், களப்பணியில் உறுதுணையாக நின்ற இயக்கங்கள், அரசியல் கட்சிகள்,அரசு அதிகாரிகளுக்கும் நன்றியையும்,பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது.
விரைவில் கழக தலைவர் ஆசிரியர் ஒப்புதல் பெற்று தந்தை பெரியார் சதுக்கத்தில் மிகப்பெரிய அளவில் கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது என்றும்
ஒசூரில் மே மாதத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது என்றும் ஒசூரில் தந்தை பெரியார் சதுக்கம் அமைவதற்கு காரணமாக இருந்த கழக தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்தையும், நன்றியும் தெரிவிப்பது என்றும். இயக்க வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்க கூடிய விடுதலை ஏட்டிக்கு சந்தா சேகரிப்பது,நடைபெற்று வரும் பெரியார் உலகம் பெரும் பணிக்கு ஒசூர் பொது மக்களிடம் நிதி திரட்டும் பணியில் முழுமையாக ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ச.எழிலன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.சந்தோஷ், மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் க.கா.சித்தாந்தன்,ஈரோடு பாண்டியன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் அ.கிருபா, சட்ட கல்லூரி மாணவர்கள் மேனாள் மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் க.கா.வெற்றி,தமிழ்தேசகுடியரசு இயக்கம் க.இரா.தமிழரசன், சித்திரம், த.சி.மார்சியா தி.மு.க மகளிரணி ராணி, பால கிருஷ்ணன், ரேவதி,பிரியா,இளைய நிலா தில்லை குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.கூட்டம் துவங்கும் முன் பெரியார் சதுக்கம் பெயர் அமைந்ததன் மகிழ்வாக கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
கலந்துகொண்டோர்
திராவிடர் கழக தொழிலாளரணி மேனாள் மாவட்ட செயலாளர் தி.பாலகிருஷ்ணன், ஓவியர்கள் பச்சையப்பன், ராஜா, தொழிலதிபர் நாகர், ஜீன்,தருமன், மகேஷ், நந்தா, நிதீஷ், நிர்மல், கோகுல், சந்திரசேகர் கலந்துகொண்டனர்.