கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

3.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொண்டர்களின் உழைப்பினாலும், மக்கள் மீது உள்ள நம்பிக்கையாலும் திமுகவின் மாபெரும் வெற்றியை எதிர்நோக்குகிறேன். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் “வெல்வோம் 200 படைப்போம் வரலாறு” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், முக்கிய துறைகள் கல்வி, கிராம வளர்ச்சி, சமூக நலம், விலைவாசி உயர்வு ஆகியவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தலையங்க செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை முடிக்கும் வகையில் தற்காலிக நீதிபதிகளை நியமிப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் மேலும் இரண்டு நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகளுடன் ஆலோசனை.
* தெலங்கானா மக்கள் தொகையில் பாதிக்கு மேல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி, தெலங்கானா மாநில மக்கள் தொகையில், 46.25% பிற்படுத்தப்பட்டோர், 10.08% பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர், 17.43% பேர் பட்டியலினத்தவர், 10.45% பேர் பழங்குடியின மக்கள் உள்ளனர். மக்கள் தொகையில் 15.79% பேர் இதர சாதியினர் (OC) உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவின் சர்ச்சைக்குரிய கருத்துகளின் பின்னணியில், நீதித்துறை ஒழுக்கம் மற்றும் தவறான நடத்தை குறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தேவ், இதுபோன்ற சூழ்நிலையில் “ஒரு நல்ல தலைமை நீதிபதி செய்யும் ஒரே விடயம், அந்த நீதிபதியிடம் இருந்து நீதித்துறை பணியை திரும்பப் பெறுவது தான்” என மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வேலைகள் எங்கே? ஒன்றிய பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட 10,000 கூடுதல் மருத்துவ இடங்கள் குறித்து மருத்துவ அமைப்புகள் கேள்வி.

தி இந்து:
* பழங்குடியினர் விவகாரங்களுக்கான அமைச்சராக பார்ப்பனர்கள் மட்டுமே பழங்குடியினர் நலனில் உண்மையான முன்னேற்றம் இருக்கும் என ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி சர்ச்சை பேச்சு. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ‘ நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை” என சுரேஷ் கோபி மழுப்பல்.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *