சென்னை, பிப். 3- சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் எதிர் காலத் தேவையைக் கருதி முதல் கட்டம் மற்றும் முதல் கட்ட நீட்டிப்பு வழித்தடங்களில் கூடுதலாக, ரூ.1,660 கோடி மதிப்பில் 6 பெட்டி களை கொண்ட 28 மெட்ரோ ரயில்களை கொளமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வுள்ளது. அடுத்த இரண் டரை ஆண்டுகளில் தலா 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்கள் தயாராகி விடும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.