தஞ்சை, பிப். 3- மாவட்ட தொழிலாளர் அணிதலைவர் ச.சந்துரு மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம் ஆகியோரது 27 ஆவது திருமண நாளை முன்னிட்டு இயக்க கூட்டங்கள் நடத்துவதற்கு நவீனமாக வடிவமைக்கப்பட்ட புதிய மேடையை தஞ்சாவூர் மாநகரகழகத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர் சிங்கிடம் வழங்கி சிறப்பித்தார்கள்.
மண நாள் காணும் வாழ்விணை யர்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள். நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி மாவட்ட துணைத் தலைவர் ப.நரேந்திரன் மாவட்ட மகளிர் அணி தலைவர் அ.கலைச்செல்வி மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், தஞ்சாவூர் மாநகர செயலாளர் செ.தமிழ்ச்செல்வன் மாநகர இணைசெயலாளர் இரா.வீரக்குமார் தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.ராமலிங்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் கா.அரங்கராசு வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் ப. சுதாகர் பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட தலைவர் தே. பொய்யாமொழி, பெரியார் வீர விளையாட்டு கழக மாவட்ட செயலாளர் சிகாமணி, ஓட்டுனர் செந்தில், விக்கிரபாண்டியன் அழகிரி, பூதலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ப.விஜயகுமார், மாவட்ட மாணவரணி தலைவர் சிந்தனையரசு உள்ளிட்ட கழகத் தோழர்களும் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.