புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (1.2.2025) தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரு.12 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்கள் வரு மான வரி செலுத்தத் தேவை யில்லை என அறிவித்தார். இதற்கி டையே ஒன்றிய பட்ஜெட்டை விமர்சித் துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், மாத ஊதிய தாரர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும் வேலையில்லாதவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த வொரு தீர்வும் இல்லை என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் 31.1.2025 அன்று குடியரசுத் தலை வர் உரையுடன் தொடங் கியது. அதைத் தொடர்ந்து நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார ஆய்வறிக் கையை 31.1.2025 அன்று நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்தார்.
தொடர்ந்து நேற்று (1.2.2025) நிர்மலா சீதா ராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த ஒன்றிய பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தது. ஒன்றிய பட்ஜெட்டை ஆளும் தரப்பினர் வரவேற்று வருகிறார்கள். அதே நேரம் இந்த ஒன்றிய பட் ஜெட்டில் ஏழை மக் களுக்கு எதுவும் இல்லை என்று எதிர்க்கட் சிகள் விமர்சித்து வரு கிறார்கள்.
அதன்படி ஒன்றிய பட்ஜெட்டை விமர்சித் துள்ள காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், வருமான வரி குறைக்கப்பட்டது ஓகே தான் என்ற போதிலும், வேலை இல் லாதவர்களுக்கு ஒன்றிய அரசு என்ன பதிலை வைத்திருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்
வரி குறைப்பு?
ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக சசி தரூர் மேலும் கூறுகையில், “பாஜக எம்பிக்கள் கூட மிடில் கிளாஸ் மக் களுக்கான வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வந்த போது மட்டுமே கைதட்டி வரவேற்றனர். நாங்கள் பட்ஜெட்டை முழுமையாக அலசி வருகிறோம். இது ஒரு நல்ல விஷயமாக இருக்கலாம். நீங்கள் மாத ஊதியதாரராக இருந்தால் இனி நீங்கள் குறைவாக வரி செலுத்தினால் போதும்.. அது ஓகே.. ஆனால், ஊதியம் வாங்க முடியாதவர்களின் நிலை என்னவாகும்.
உண்மை தான்.. நீங்கள் ஒரு வேலையில் இருந்து உங்களுக்கு ஆண்ட ஊதியமாக ரூ. 12 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக வருகிறது என்றால்.. நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால், வேலையில்லாத இளைஞர்களுக்கு இந்த அரசு என்ன திட்டத்தை வைத் திருக்கிறது.. வேலையில்லா திண்டாட் டம் குறித்து எதையும் இந்த அரசு பேசவில்லை.
ஒரு வார்த்தைகூட இல்லை
வேலையில்லா திண்டாட்டம் அல்லது பணவீக்கம் என்ற வார்த்தைகளைக்கூட நிதியமைச்சரிடம் இருந்து நாங்கள் கேட்க வில்லை. கருணை கொண்டு அவர் தனது பேச்சைச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். ஆனால், வேலையில்லா திண்டாட்டம் அல்லது பணவீக்கம் குறித்து அவர் எதையும் பேசவில்லை.
வரும் நாட்களில் எங்கெல்லாம் தேர்தல் நடைபெறுகிறதோ.. அந்த மாநில மக்களுக்காக பாஜக அரசு பட்ஜெட்டை பயன்படுத்துகிறது. நீங்கள் பீகாரில் வசிக் கிறீர்கள்.. அல்லது பாஜக கூட்டணிக் கட்சி ஆட்சியிலுள்ள மாநி லங்களில் இருக்கி றீர்கள் என்றால் உங் களுக்கு மட்டுமே இதனால் லாபம்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.