புதுடில்லி, பிப்.2 15 ஆண்டுகளாக இல்லாத உச்சத்தை கார்ப்பரேட் லாபங்கள் எட்டியிருக்கும் நிலையில், அவர்களுக்கு வரி உயர்வு கொடுக்கப்படாதது ஏன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். 100 நாள் வேலை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீட்ட்டில் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படாதது குறித்து விமர்சித்துள்ள அவர், மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதி பகிர்விலும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டிருப்பதாக தெரிவித் துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய பட்ஜெட் டில் தமிழ்நாட்டிற்கான எந்த திட்டங்களும் அறிவிக்கப் படவில்லை. பீகார் மாநிலத்திற்கு மட்டும் ஏராளமான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது. இத னால் மிடில் கிளாஸ் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்பட்டு வருகிறது.
மக்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதால், ஒன்றிய அரசுக்கு நேரடி வரிவிதிப்பு மூலமாக ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் பட் ஜெட் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஎம் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
ஓர வஞ்சனை
அதில், நிதி ஆணைய நெறிகளின்படி மாநிலங்களுக்கு தர வேண்டிய பகிர்வு தொகையில் 2024 – 25இல் ஒன்றிய அரசு செய்திருக்கிற வஞ்சனை ரூ.27 லட்சம் கோடியாகும். பட்ஜெட் தொகைக்கும் உண்மை பகிர்வுக்கும் இடையே பள்ளம்.. அல்ல.. பாதா ளம். ஒன்றிய அரசின் இந்த பட்ஜெட் மாநிலங்களை வஞ்சித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அதேபோல், 15 ஆண்டுகளாக இல்லாத உச்சத்தை கார்ப்பரேட் லாபங்கள் எட்டி இருக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் ஆய் வறிக்கை வெளிடப்பட்டது. லாபங்களை அனுபவிக்கும் கார்ப்பரேட்டுகள், வருமான உயர்வையோ வேலை வாய்ப்பு உயர்வையோ உருவாக்கவில்லை என்பது குற்றச்சாட்டாகும். ஆனால் எந்த குறுகுறுப்பும் இல்லாத ஒன்றிய அரசு பட்ஜெட்டில் எந்த உயர்வையும் கார்ப்பரேட் வரிகளில் செய்யவில்லை.
ஆய்வறிக்கை காதைக் கிள்ளி னாலும் அசராமல் அள்ளிக் கொடுக்கிறது ஒன்றிய அரசு. இதுமட்டுமல்லாமல் 100 நாள் வேலைத் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு அதே ரூ.86 ஆயிரம் கோடி தான். ஒரு ரூபாய் கூட உயர்வில்லை. அந்த நிதி ஒதுக்கீடு 9 மாதங்களில் காலியானாலும், கூலி பாக்கிக்காக மாநிலங்கள் எத்தனை முறை கதவுகளை தட்டினாலும் பலனில்லை. 30 நாள் வேலைத் திட்டம் என்று பெயர் மாற்றாத பெருந்தன்மைக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.