விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? – சிரோண்மணி அகாலிதளம் கேள்வி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள நாடாளுமன்ற உறுப்பினர் அர்சிம்ரத் கவுர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

2025 – 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக் கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (1.2.2025) தாக்கல் செய்து உரையாற்றினார். பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பீகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அந்த மாநிலத்திற்கு அதிக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயி களுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள நாடாளுமன்ற உறுப்பினர் அர்சிம்ரத் கவுர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங் களின் பெயர்கள் மட்டும் பட்ஜெட்டில் உள்ளன. குறிப்பாக பட்ஜெட்டில் இருந்தது பீகார், பீகார், பீகார்… மட்டுமே. பஞ்சாப் பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காக விவசாயிகள் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக அவர்கள் என்ன அறிவித்தார்கள்? இது விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயி களின் குரல் கேட்கப்படவில்லை என்பது மிகவும் வருத்த மளிக்கிறது” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *