கவனத்திற்குரிய முக்கிய செய்திகள – 2.2.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

  • அனைத்து ஆய்வு அறிக்கைகளிலும் தமிழ்நாட்டுக்கு பாராட்டு பத்திரம் வாசிக்கப்படுகிறது நிதிநிலை அறிக்கையில் மட்டும் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்படுவது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

  • பட்ஜெட்டில் ரூ.574 கோடி மட்டுமே ஒதுக்கிய நிலையில், 2021இல் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025 ஆண்டிலும் எடுப்பதற் கான வாய்ப்புகள் இல்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • ‘ஏழைகள், வேலையின்மைக்கு துரோகம்’: புதிய யோசனைகள் இல்லை, அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கண்டனம்.
  • ஒன்றிய பட்ஜெட் 2025 சிறப்பம்சங்கள்: வருமான வரியில் பெரிய வெட்டுக்கள் என்பது 2019ஆம் ஆண்டு அதன் கார்ப்பரேட் வரி குறைப்பு பலனளிக்கவில்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகும். வரிசைமுறை மாற்றப்பட்டிருந்தால் – முதலில் அய்டி குறைப்பு, பின்னர் கார்ப்பரேட் வரி குறைப்பு – முடிவுகள் மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கும் என்கிறார் உதித் மிஸ்ரா.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  •  உத்தரப்பிரதேசம் அயோத்தியில் இளம் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் இறந்து கிடந்தார், பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் சக கிராம மக்களும் இது ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு என்று சந்தேகித்தனர்.

தி டெலிகிராப்:

  • 2025-2026 பட்ஜெட் சாதாரண மக்களுக்கும் இந்தியாவிற்கும் பேரழிவாக இருக்கும். திட்டங்களில் வெட்டுக்கள்; இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு எதுவும் இல்லை; உற்பத்தி தேக்கநிலை; காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு; வரி குறைப்புகளின் நிகர விளைவு; இந்தியாவின் கடன் வளரும் என்கிறார் மேற்கு வங்க முதலமைச்சரின் நிதித்துறை சிறப்பு ஆலோசகர் அமித் மிஸ்ரா.
  • வரவு செலவுத் திட்டம் 2025-2026 ‘விவசாயிகளுக்கு எதிரானது’, வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கை ஏற்கப்பட வில்லை: சம்யுக்தா கிசான் மோர்ச்சா கண்டனம்.
  • மகாராஷ்டிராவில் நடத்தப்படும் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு வினாத்தாள்கள் ரூ.40 லட்சத்திற்கு விற்பனை: பதிவு வேகமாக பரவும் நிலை யில் பந்தாராவில் 2 பேர் கைது. 280000 பேர் விண்ணப்பித்த நிலையில், தேர்வு இன்று நடைபெறு கிறது.
  • டில்லி தேர்தலில் சீட் மறுப்பு; 7 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் பதவி விலகல்; பாஜகவில் சேர்ந்தனர்.

 

.– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *