கன்னியாகுமரி, பிப்.1- தந்தை பெரியாருடைய கருத்துக்களை மாணவர்க ளுக்கு எடுத்துக்கூறும் வகையில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் குமரிமாவட்ட பகுத்தறிவாளர்கழகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கம் வீரர் பெரியார்… பெரியாரும் பெண்ணுரிமையும் பெரியார் பெற்றுத்தந்த சமூக நீதி ஆகிய தலைப்பு களில் பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி.லீமா ரோஸி தலைமையில் நடைபெற்றது.
கழகக் காப்பாளர் ம.தயாளன் முன் னிலை வகித்தார். கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் ஆகியோர் போட்டியினை தொடங்கிவைத்தார்கள். போட்டியினை பள்ளி தமிழ் ஆசிரியை லில்லி ஒருங்கிணைத்தார். ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் போட்டியில் கலந்து கொண்டு பெரியார் பற்றி கட்டுரை எழுதினர்.