சென்னை, பிப்.1 இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து எழுதப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்லியிருப்பதின் வரலாற்று ஆய்வு பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
‘‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி’’ என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை.
இதற்கெல்லாம் ஆதாரமாக அள்ள அள்ள கொடுக்கும் பண்பாட்டுக் கோள மாக அமைந்தது கீழடியில் அகழாய்வு.
சிந்து சமவெளி, மொகஞ்சதாரோ, ஹரப்பாவை பின்னுக்குத் தள்ளக்கூடியது வைகை நதி நாகரிகம் என்று அறைகூவல் விடுத்தது கீழடி அகழாய்வு முடிவுகள்…
தமிழ்நாட்டில் தோண்டத் தோண்ட அகழ்வாய்வில் கிடைக்கும் புதையல் தமிழர்களின் பெருமையை உலகம் அறிய, முக்கிய அறிவிப்பு காத்திருக்கிறது என்று சஸ்பென்ஸ் வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
அறிவியல் ஆதாரம்
இரும்பின் தொன்மை நூல் வெளி யீட்டு விழாவில் அந்த சஸ்பென்ஸை உடைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்திலிருந்துதான் எழுதப்படும் என்றதோடு, அதற்கான அறிவியல் ஆதாரத்தையும் தெரிவித்தார்.
கொடுமணல், மயிலாடும்பாறை, சிவகளை, ஆதிச்சநல்லூர் ஆய்வுகளில் இரும்பு பொருட்கள் கிடைத்த வேளை யில், அந்த வரலாற்று பொக்கிஷங்களின் ஆய்வு முடிவை விவரித்தது ஏ.வி. இந்த ஆய்வு முடிவுகள், சிந்து சமவெளி நாகரித்தை கடந்து ஒரு தனி நாகரிகமே இருந்தது என்பதை காட்டுவதாக ஆச்சரியம் தெரிவித்தார் இந்திய தொல்லியல் துறை மேனாள் தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரி
5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் கொண்டிருந்த தொழில் நுட்பத்தை விளக்கினார் தொல்லியல் துறை
செயலாளர் உதயச்சந்திரன்….
5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பு தாதுவில் இருந்து இரும்பை பிரித்தெடுத்து, இரும்பை உருக்கி ஆயுதமாக பயன்படுத்திய இனம் தமிழினம் என்பது உறுதியாகியிருக்கிறது…
இதை சுட்டிக்காட்டி, உலகின் மூத்த குடி தமிழ்குடி என்பதை மெய்பிக்க இன்னும் இந்த உலகம் வியக்கும் ஆதாரப் புதையல்கள் தமிழ் நிலத்தில் கிடைக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.