கலைஞர் இல்லம் திட்டத்திற்கு
மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு
கலைஞரின் கனவு இல்ல திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2024-25இல் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3,50,000/-வீதம் மொத்தம் ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.500 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது.
இளைஞர்களின் தேசம்
முதியோர் தேசமாக மாறும்
கருவுறுதல் விகிதம் 2.0ஆக குறைவதாலும், மக்களின் ஆயுள் அதிகரித்திருப்பதாலும், இளைஞர்களின் தேசமான இந்தியா 2050ஆம் ஆண்டு முதியவர்களால் நிரம்பும் நாடுகளுடன் இணையும் என அய்.நா. எச்சரித்துள்ளது. 2050ல் 65 வயதுக்கும் மேற்பட்டோர் எண்ணிக்கை 25.4 கோடியாக அதிகரிக்கும். அப்போது, மக்கள் தொகையில் 15% முதியோர் இருப்பார்கள். 2056இல் குழந்தைகளின் எண்ணிக்கையை விட முதியோர் எண்ணிக்கை அதிகமாக இருக்குமாம்.
NO CASH… ONLY UPI…
இந்த நிலைமை வந்துடுமோ?
இந்தியாவின் டிஜிட்டல் பேமண்டில், UPIயின் பங்கு 83%ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பான RBI அறிக்கையில், 2019இல் 34%ஆக இருந்த UPI பயன்பாடு தற்போது 83%ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், UPIயின் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி 74% என்ற அளவில் இருப்பதாகவும் RBI தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. RTGS, NEFT உள்ளிட்ட டிஜிட்டல் பேமண்ட்களின் பயன்பாடு 66%லிருந்து 17%ஆக குறைந்துள்ளது.