காந்தியார் கொல்லப்பட்டபோது இனிப்பு வழங்கியது யார்? ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

viduthalai
2 Min Read

சென்னை, ஜன.31 காந்தியார் கொல் லப்பட்டபோது இனிப்பு வழங்கி கொண்டாடியது யார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவாரா என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றச்சாட்டு

காந்தியாரின் நினைவு நாளிலும் அவர் கேலி செய்யப்பட வேண்டுமா என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை தரப்பில், காந்தியின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று காந்தி மண்டபத்தில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வருகிறேன். ஆனால் அந்த கோரிக்கையை மு.க.ஸ்டாலின் ஏற்க மறுக்கிறார். காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார் என்றும் குற்றம ்சாட்டப் பட்டிருந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காந்தி மண்டபம்

இதற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பதி லடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான இடங்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும். கிண்டியில் 27 ஜனவரி 1956 அன்று ராஜரத்தினம் நாதஸ்வரம் வாசிக்க, சுப்பு லக்ஷ்மி ரகுபதி ராகவ பஜனை செய்ய, அப்போதைய மதராஸ் முதலமைச்சர் ராஜகோ பாலாச்சாரியால் காந்தி நினைவகம் திறக்கப் பட்டது.

அதுவே பின் நாளில் மக்களால் காந்தி மண்டபம் என அழைக்கப்பட்டு பெயரானது. ஆளுநர், ஆட்சியாளர்கள் தான் சொல்வதை கேட்டே ஆகவேண்டும் என்னும் மனநிலையில் இருந்து விலகவேண்டும். காந்தியாரின் நினைவு தினம், ஒவ்வொரு ஆண்டும் எழும்பூர் அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதே ஆளுநர் கடந்த 2023 ஆண்டு முதல மைச்சருடன் காந்தியாரின் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தினார். காந்தியாரின் இறுதிக் காலத்தில் அவரது தனிச் செயலாளராக இருந்த தியாரே லால் நய்யார் தாம் எழுதிய ‘மகாத்மா காந்தி கடைசிக் கட்டம்’ என்ற நூலில் வெள்ளிக்கிழமையன்று நல்ல செய்தி வரும். எனவே ரேடியோவை தொடர்ந்து கேட்கவும் என்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் சில இடங்களில் ஏற்கெனவே கூறியிருந்தார்கள்.

இனிப்பு விநியோகம்

அதுமட்டுமல்ல, காந்தியார் கொல்லப்பட்ட செய்தி வெளியானதும் ஆர்எஸ்எஸ் உறுப்பி னர்கள் பல இடங்களில் இனிப்புகளை விநியோ கித்து கொண்டாடி னார்கள் என்றும் குறிப் பிட்டுள்ளார். எந்த சித் தாந்தம் உடையவர்கள் தேசப்பிதாவின் இறப்பைக் கூட கொண்டாடினார்கள் என்று ஆளுநர் சொல்லுவாரா?

தசரா விழாவின் போது அரக்கனான ராவணனை எரிப்பதுபோல, இனிமேல் காந்தியார் கொல்லப்பட் டதை ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் சுட்டு கொண்டாடப் போகி றோம் என ஊட கங்களிடம் பகிரங்கமாக சொன்னாரே புஜா சகுன் பாண்டே, அவர் எந்த கொள்கையை அடிப்படையாகக் கொண்டவர் என்று ஆளுநர் சொல்லுவாரா? தந்தை பெரியார், காந்தி கொடியவன் கோட் சேவால் சுடப் பட்டு இறந்தவுடன், இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயரிடப்படவேண்டும் என்று கூறியதை ஆளு நருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *