பேராசிரியர் ஜவாஹிருல்லா சட்ட ஆணையத்துக்கு மனு
தருமபுரி, ஜூலை 16– பொது சிவில் சட்டம் தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு சட்ட ஆணை யத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இருப்பதாக தருமபுரியில் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரி வந்தார். முன்ன தாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
ஒன்றிய அரசு, சட்ட ஆணையம் மூலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மக்க ளின் கருத்துகளை கேட்டுள்ளது. போபாலில் அண்மையில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியாவுக்கு 2 சட்டங்கள் இருக்க முடியாது. ஒரே சட்டம் தேவை என பேசியிருக்கிறார்.
அவர் வகிக்கும் பதவிக்கு இந்த கருத்து கண்ணியத்தை அளிப்பதாக இருக்காது. சட்ட ஆணையத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பிரதமர் பேசியிருப்பது வன்மை யாக கண்டிக்கத்தக்கது. 5 ஆண்டு களுக்கு முன்பு சட்ட ஆணையம் பொது சிவில் சட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டபோது கிடைத்த தகவல்களின் அடிப் படையில் அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை, ‘பன்முகத் தன்மை கொண்ட நம் இந்திய நாட்டுக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை’ என்று தெரிவித்துள்ளது.
ஆனாலும், வரவிருக்கும் மக்க ளவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்ட செயல்பாடுகளை மோடி அரசு தற்போது மேற்கொள்கிறது. இது ஒரு தேர்தல் வித்தையாகவே தெரிகிறது.
பொருளாதார நிபுணர் அமர்த் தியா சென் கூறும்போது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பொது சிவில் சட்டம் இல்லாமல் இந்தியா சிறப்பாக வாழ்ந்து வந் திருக்கிறது. இந்த சட்டம் கொண்டு வருவது என்பது ஆர்.எஸ்.எஸ். திட்டங்களை நடைமுறைப்படுத் தத் தான் என தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டம் இஸ்லாமி யர்களுக்கு மட்டுமல்ல இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயின், சுய மரியாதை திருமணம் செய்பவர் கள் போன்றோருக்கும் எதிரானது தான்.
நம் நாட்டில் 98 சதவீதம் சட் டங்கள் அனைவருக்கும் பொதுவா னவையாகத் தான் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளன. மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி குளிர் காயும் எண்ணத்துடன் பா.ஜ.க. இந்த சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. இது நாட்டுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய முயற்சி. அதிமுக உட்பட அனைத்து அரசியல் கட்சியினரும் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற அ.தி.மு.க. துணை போகாமல் உறுதியாக இருக்க வேண்டும். வரும் மக்க ளவை தேர்தலில் பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்புவோம்.
அமைச்சரை பதவியை விட்டு ஆளுநர் நீக்கியதாக இதுவரை வரலாறு இல்லை. அதைச் செய்த பெருமை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியையே சேரும். தமிழ் நாட்டின் சர்வாதிகாரியாக அவர் செயல்படுகிறார்.
தமிழ்நாடு ஆளுநர் திரும்பப் பெறப்பட வேண்டும் என்பதே மாநில உரிமைகளை நேசிக்கக் கூடிய அனைவரின் விருப்பமாக உள்ளது. அவர் தமிழ்நாட்டில் இருந்து விரட்டப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.