வல்லம்,ஜன.30- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 28.01.2025 அன்று காலை 10.30. மணியளவில் நடேசபிள்ளை மகால், மன்னார்குடியில் “வெற்றிப் பாதை தேர்வை வெல்லுவோம்!” வெற்றி வாகை சூடுவோம்! என்ற மய்ய தலைப்பில் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் வெற்றிப் பாதைக் குறித்து முதல் அமர்வில் திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் டி.இராஜேஸ்வரி உரையாற்றும் போது தேர்வு நேரங்களில் காலத்தை வீணடிக்காமல் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும்.
இணையதளத்தில் நேரத்தை செலவு செய்யக்கூடாது. தேர்வு பற்றி பயம் இல்லாமல் அனைத்து கேள்விகளுக்கும் விடை அளிக்க வேண்டும். அதற்கான நேரத்தில் முறையாக பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறினார்.
அமர்வு 1: “வெற்றிப் பாதை” என்ற தலைப்பில் முதுகலை ஆசிரியர் முனைவர் வி.எஸ்.கோவிந்தராஜன் மாணவர்களுக்கு பாடத்திட்டம் தொடர்பான கருத்துகளை எடுத்துரைத்தார்.
அமர்வு 2: “தேர்வும் தெளிவும்” என்ற தலைப்பில் முதுகலை ஆசிரியர் முனைவர்
எஸ்.அன்பரசு மாணவர்களுக்கு இயற்பியல் தொடர்பான பாடத் திட்டங்கள் தொடர்பான பாடத்திட்ட கருத்துக்களை விளக்கிக் கூறியதோடு அதில் காணப்படும் சிக்கல்களை மாணவர்கள் எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கி கூறினார்.
அமர்வு 3: “கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகள்” என்ற தலைப்பில் முதுகலை ஆசிரியர் முனைவர் ஜி.மனோகரன் மாணவர்களுக்கு வேதியியல் தொடர்பான பாடத்திட்டங்கள் தொடர்பான பாடத்திட்ட கருத்துகளை விளக்கி கூறினார்.
அமர்வு 4: “நாம் சாதிக்க பிறந்திருக்கிறோம்” என்ற தலைப்பில் முதுகலை ஆசிரியர் முனைவர் ஜி.கார்த்திகேயன் மாணவர்களுக்கு கணிதவியல் தொடர்பான பாடத்திட்டங்கள் தொடர்பான பாடத்திட்ட கருத்துக்களை விளக்கி கூறினார்.
அமர்வு 5: “போட்டி தேர்வும் இன்றைய போட்டி உலகமும்” என்ற தலைப்பில் முனைவர் கே.செல்வகுமார் மாணவர்களுக்கு பாடத் திட்டங்கள் தொடர்பான பாடத்திட்ட கருத்துகளை விளக்கி கூறினார்.
மேலும் தலைமையாசிரியர் ஆர்.கலைச்செல்வன் “கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற தலைப்பில் மாணவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்வது, +2 படிக்கும் மாணவர்கள் பாடத் திட்டங்களை புரிந்து இயற்பியல் தொடர்பான வினை மாற்றங்களை கற்றுக்கொண்டு தன்னம்பிக்கையோடு மாணவர்கள் நன்கு படித்து முன்றே வேண்டும் என்று கருத்துகளை பதிவு செய்தார்.
இவ்விழாவில் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வெ.இராமச்சந்திரன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமான கருத் துரைகளை வழங்கி தலைமையுரை வழங்கினார்.
மேலும் உயர் கல்வியின் முக்கியத்துவம், திறன் மேம்பாட்டு கல்வி மற்றும் பயிற்சி, இன்றைய வாழ்க்கை முறைக்கு எற்றவாறு உயர்கல்வியை தேர்வு செய்தல் ஆகியன பற்றியும் குறிப்பிட்டார்.
மாணவர் சேர்க்கை இயக்குநர் முனைவர் எம்.சர்மிளாபேகம் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவில் சுமார் 16 பள்ளிகள், +2 மாணவர்கள் 742, 48 பள்ளி ஆசிரியர்கள் கலந்துெக்ாண்டு தங்களுக்கு ஏற்பட்ட அய்யங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.
அவை மட்டுமல்லாமல் மேலும் மாணவர்களுக்கு கண்ணை கவரும் விதத்தில் அறிவியல் சார்ந்த பல கண் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் மன்னார் குடி மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மன்னார்குடி மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் கோவி.அழகிரி, வெற்றிப்பாதை ஒருங்கிணைப்பின் பேராசிரியப் பெருமக்கள் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் மிகவும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இறுதியாக வெற்றிப்பாதை ஒருங்கிணைப்பாளர் பேரா ஆர்.கே.முத்துராமன் நன்றி கூறினார். இந்நிகழ்வினை முனைவர் பி.குரு, முனைவர் ஜி.தமிழ்வாணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.