உச்சநீதிமன்றம் தீா்ப்பு
புதுடில்லி, ஜன. 30- முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
இடஒதுக்கீடு
கடந்த 2019ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலை நகரான சண்டீகா் அரசு மருத்துவக் கல்லூரியில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதை ரத்து செய்து மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு, ‘முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா? அத்தகைய இடஒதுக்கீட்டை அனுமதிக்க முடியுமா?’ உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, அதிக நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மனுக் களை பரிந்துரைத்தது.
இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சுதான்ஷு தூலியா, எஸ்.வி.என்.பாட்டீ ஆகியோர் அடங்கிய அமா்வு தீா்ப்பளித்தது.அப்போது நீதிபதிகள் அமா்வு தெரிவித்ததாவது: நாம் அனைவரும் இந்தியாவில் வசித்து வருகிறோம். ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என்ற பொதுவான பிணைப்பு, இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நமது வசிப்பிடத்தை தோ்வு செய்யும் உரிமையை நமக்கு அளிக்கிறது. அந்தப் பிணைப்பு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நாம் வா்த்தகம் அல்லது தொழில் செய்வதற்கான உரிமையையும், இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்று படிப்பதற்கான உரிமையையும் நமக்கு அளிக்கிறது.
ஒரு மாநிலத்தில் வசிப் போருக்கு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீட்டின் பலனை இளநிலை மருத்துவப் படிப் புகளில் மட்டும் குறிப்பிட்ட அளவுக்கு வழங்கலாம். ஆனால், முதுநிலை மருத் துவப் படிப்பில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது அரசமைப்புச் சட் டப் பிரிவு 14-க்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.