அரியலூர் மாவட்டத்தில் பகுதிவாரியாக கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்றார்

Viduthalai
4 Min Read

மீன்சுருட்டி, ஜன. 30- அரியலூர் மாவட்டத்தில் பகுதிவாரியாக கழக கலந்துரை யாடல் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது 28.1.2025 அன்று காலை 8:30 மணிக்கு அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் தோழர்கள் சந்திப்பு கலந்து ரையாடல் நிகழ்ச்சி தொடங் கியது. வருகை தந்த கழகப் பொதுச் செயலாளருக்கு பய னாடை அணிவித்து சிறப்பு செய் யப்பட்டது .
பொதுக்குழு உறுப்பினர் ராஜா அசோகன் மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் அ.சேக்கிழார், மீன்சுருட்டி ரஞ்சித்குமார் ஆகி யோரிடம் இயக்க வளர்ச்சி குறித்து கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் கலந்துரையாடி ஆலோசனைகள் வழங்கினார்.
அடுத்து காலை 9.45 மணியளவில் உதயநத்தம் பெரியார் பெருந்தொண்டர் சொ.மகாலிங்கம் இல்லத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தா.பழூர்
அடுத்ததாக தா.பழுர் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து ரையாடல் ஆசிரியர் ராஜேந்திரன் இல்லத்தில் 10.30 மணியளவில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் இரா.இராமச்சந்திரன் ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம் உல்லியக்குடி சிற்றரசு,சூரிய நாராயணன் விஜயராகவன் ஆகியோர் பங்கேற்று கருத்துகளை கூறினர் .,தா.பழூர் ஒன்றியத்தில் நடைபெற்ற இயக்கப் பணிகள் , இளைஞர்களின் புதிய வரவு குறித்தும் கழகப் பரப்புரைகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் பொதுச்செயலாளர் ஆலோசனைகள் வழங்கினார் .

ஜெயங்கொண்டம்
அதனை தொடர்ந்து ஜெயங்கொண்டம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சந்திப்பு எழில் விடுதிவளாகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், மாவட்ட தொ.அ. செயலாளர் மா.கருணாநிதி, ஒன்றிய செயலாளர் உத்தரக் குடி ஆ. ஜெயராமன், ஒன்றிய அமைப்பாளர் லெ. அர்ஜுனன், தா.பழூர் ஒன்றிய அமைப்பாளர் சி. தமிழ் சேகரன் ஆகியோர் பொதுச் செயலாளரின் கருத்து களை கேட்டு இயக்கத்தை வலுப் படுத்துவதாக கூறினர் .

விளாங்குடி
அடுத்ததாக பகல் 12 .30 மணிக்கு விளாங்குடி மணிகண்டன் இல்லத்தில் அரியலூர் ஒன்றிய தோழர்கள் சந்திப்பு நடைபெற்றது. த.அருண் பாண்டியன், லோ.முகேஷ், ச.சரத் குமார், த.கண்ணன், சரத்ராஜ், ஜோ.ராகவி, வி.ஜி.மணிகண்டன், மறவனூர் மதியழகன் உள்ளிட்ட தோழர்கள்பங்கேற்று அவர்கள் செய்யக்கூடிய கல்விப்பணிகள் பற்றியும் இளைஞர்களை இணைப்பதையும் பொதுச் செயலாளரிடம் விளக்கினார்கள் . கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தந்தை பெரியாரின் சிறப்புகளையும் அம்பேத்கரின் சிறப்புகளையும் எடுத்துக்காட்டி அவர்கள் எப்படிப்பட்ட நண்பர்களாக ஜாதி ஒழிப்பில் அக்கறை உள்ளவர்களாக திகழ்ந்தனர். வைக்கம் போராட்டம் மகத் குளப்போராட்டம் ஆகியவற்றை விளக்கி சிறப்புரையாற்றினார்.

திருமானூர்
இதற்கு பின் திருமானூர் ஒன்றியத்தில் திருமானூர் ஒன்றிய தலைவர் க. சிற்றரசு ஒன்றிய செயலாளர் பெ.கோபிநாதன் திருமானூர் நகர செயலாளர் சு.சேகர் ஆகியோரை சந்தித்து இயக்க வளர்ச்சிகள் குறித்தும் விடுதலை சந்தா குறித்தும் பேசப்பட்டது

செந்துறை
மாநில ப.க. அமைப்பாளர் தங்க சிவமூர்த்தி இல்லத்தில் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் கழக லட்சியக்கொடியை ஏற்றி வைத்தார். பேராசிரியர் அருள், ஆத்தூர் பகுத்தறிவாளன், ஆசிரியர் சிவசக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
செந்துறை ஒன்றிய கலந்து ரையாடல் கூட்டம் 28.1.2025 மாலை 4.45 மணியளவில் பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகத்தில் நடைபெற்றது . காப்பாளர் சு. மணிவண்ணன் , ஒன்றிய தலைவர் மு. முத் தமிழ்செல்வன் ஒன்றிய செயலா ளர் ராசா. செல்வக்குமார் , மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் வெ. இளவரசன் மாவட்ட விவசாய அணி தலைவர், மா.சங்கர், நகரத் தலைவர் ப. இளங்கோவன் , குழுமூர் சுப்பராயன் நத்தக்குழி பெ.கோபால், ரத்தின ராமச்சந் திரன், ரஜினிகாந்த் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். உலகத் தில் உள்ள தத்துவ தலைவர்களின் இயக்கங்களையும் தந்தை பெரியாரின் இயக்கத்தையும் ஒப்பிட்டு தமிழர்களின் மேம் பாட்டிற்கு உழைத்த திராவிட இயக்கத்தை திராவிடர் கழகத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பொதுச்செயலாளர் சிறப்புரையாற்றினார் .

ஆண்டிமடம்
ஆண்டிமடம் ஒன்றிய திராவிடர்கழக பொறுப்பாளர்கள் கூட்டம் 28.1.2025 மாலை 6.15 மணியளவில் தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகத்தில் நடைபெற்றது மாவட்ட துணைச் செயலாளர் க. கார்த்திக் கடவுள் மறுப்பு கூறினார் .ஒன்றிய செயலாளர் தியாக.முருகன் வரவேற்புரையாற்றினார் . நகர செயலாளர் டி எஸ் கே அண்ணாமலை கழக பொதுச் செயலாளருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.ஒன்றிய அமைப்பாளர் கோ.பாண் டியன் நகரத் தலைவர் .ந.சுந்தரம் நகர அமைப்பாளர் பட்டுசாமி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் க. செந்தில், ப.சுந்தரமூர்த்தி தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந் தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாநில ப.க. அமைப்பாளர்தங்க. சிவமூர்த்தி ஆகியோர் உரையாற்றி யதற்கு பின்னர் கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார். தந்தை பெரியாரின் தொண்டறத்தை மறைத்து அவரை இழித்தும் பழித்தும் பேசக்கூடிய ஒரு கும்பல் புறப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு பதில் அளிக்கக் கூடிய வகையில் இயக்க பரப்புரை கூட்டங்களையும் கழகக் கொடியேற்றுதல் புதிய உறுப்பினர்களை சேர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தி தந்தை பெரியாரின் கொள்கையை எதிர்வரும் 50 ஆண்டுகளுக்கு கடத்தும் பொறுப்பை நாம் சிறப்பாக செய்ய வேண்டும் என்று கூறி உரையாற்றினார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் தலைமை செயற்குழு உறுப்பினர் க. சிந்தனைச் செல்வன் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் மு.கோபால கிருஷ்ணன் மாவட்ட துணைத் தலைவர் இரா. திலீபன், மாநில ப.க. அமைப்பாளர் தங்கசிவமூர்த்தி, இரத்தின ராமச் சந்திரன் ஆகியோர் சிறப்பாக பங்கேற்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *