விழுப்புரம், ஜூலை 16 பாலியல் தொல்லை, ஆபாசமாக பேசிய விழுப் புரம் மாவட்ட பாஜக தலைவரை நீக்க கோரி நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவராக கலிவரதன் செயல்பட்டு வருகிறார்.
ஏற்கெனவே இவர் பல்வேறு குற்றச் சாட்டுகளில் சிக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெண் நிர்வாகியிடம் பாலி யல் தொந்தரவு, ஆபாசமாக பேசியதாக காவல்துறை கண்காணிப்பாளிடம் புகார் அளிக்கப்பட்டு, கட்சி மேலி டத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அண்ணாமலை கட்சியின் தலைவரா? என்று கலிவரதன் பேசிய ஒலிப்பதிவும் சமூக வலைத் தளங்களில் பரவியது.
இந்நிலையில், கட்சியில் பெண் களுக்கு பாதுகாப்பு இல்லாததால், மாவட்ட தலைவர் கலிவரதனை கட்சியிலிருந்து நீக்கக்கோரி கடந்த வாரம் விழுப்புரம் கட்சி அலுவலகத்தில் பெண்கள், நிர்வாகிகள் போராட்டத் தில் ஈடுபட்டனர். இருப்பினும், கட்சித் தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது விழுப் புரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண் தொண்டர்கள் அதிருப்தி யடைந்துள்ளனர். ‘மாவட்ட தலைவர் கலிவரதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் கட்சியிலிருந்து விலகுவோம்’ என்று நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (15.7.2023) தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதனை நீக்கக்கோரி கட்சி அலுவலகம் முன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். இதனை அறிந்த மாவட்ட தலைவர், முன்னதாக கட்சி அலுவலகத்தின் கதவுகளை இழுத்து மூடி சாவிகளை எடுத்துச் சென்றார்.
இருப்பினும், கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து, ‘மாவட்ட தலைவர் கலிவரதனை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும். இல்லை என்றால் விழுப்புரம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்’ என கூறி மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், பெண்களுக்கு பாதுகாப்பான கட்சி பா.ஜ.க. என்று வெளியே மட்டும்தான் கூறுகிறார்கள். ஆனால், கட்சிக்குள் நடக்கும் பாலியல் தொந்தரவுகள் குறித்து ஒரு நடவடிக்கையும் எடுப்ப தில்லை. இதற்கு பல ஒலி, ஒளிப் பதிவுகளே சாட்சி. இந்த ஒலிப்பதிவு மற்றும் காட்சிப் பதிவுகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாநில தலைமையிடம் முறையாக புகாரளித்தும் அண் ணாமலை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட தலைவர் கலிவரதனை நீக்கும் வரை நாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம்’ என்றனர்.