காஞ்சிபுரம், ஜன.28 கடந்த 26.1.2025 காலை 11 மணியளவில், காஞ்சிபுரம், மிலிட்டரி சாலை, மாவட்டத் தலைவர் இல்லத்தில் உள்ள தமிழர் தலைவர் கூடத்தில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம், மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமையில் நடைபெற்றது.
முனைவர் காஞ்சி கதிரவன் கடவுள் மறுப்பு கூறினார். மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆ.மோகன் அனைவரையும் வர வேற்றார்.
வள்ளலாரை காப்போம்!
கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், அறிஞர் அண்ணாவின் 57ஆம் நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் நாளில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ‘‘திருடர்கள் ஜாக்கிரதை‘‘ திருவள்ளுவர், வள்ளலாரை காப்போம்! என்றதலைப்பில் சிறப்புரையாற்ற வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியருக்கு எழுச்சிமிகு வரவேற்பளித்து கூட்டத்தை சிறப்பாக நடத்து வதற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றும் கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். மேற்கண்ட கருத்துகளையே தீர்மானமாக முன்மொழிய அனைவரும் ஏற்று கைத்தட்டல் மூலம் வழி மொழிந்தனர்.
மாவட்டத் தலைவர் அ.வெ.முரளி கூட்டம் நடத்துவதற்கான ஆயத்தப் பணி களையும், திட்டமிடலையும் விவரித்தார். அனைவரும் இணைந்து கூட்டத்தைச் சிறப்பாக நடத்து வோம் என்று உறுதி யளித்தார்.
நன்கொடை அறிவிப்பு
தலைமை செயற்குழு உறுப்பி னர் பு. எல்லப்பன் 3000/-
கழக சொற்பொழிவாளர் முனைவர் பா. கதிரவன் 10,000/-
மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா. இளம்பரிதி 10,000/-
மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் ஆ. மோகன், மாவட்ட மகளிரணித் தோழர் அ. ரேவதி இணைந்து 10,000/-
மாநகர திராவிடர் கழகத் தலைவர் ந. சிதம்பரநாதன் 5000/-
மாநகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பெ. சின்னதம்பி 3000/-
கழக ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பி னர் பு.எல்லப்பன், அறிவு வளர்ச்சி மன்றத்தின் நிறுவனர் நாத்திகம் நாகராசன், கழக சொற்பொழிவாளர் முனைவர் பா.கதிரவன், மாவட்ட துணைச் செயலாளர் சீதாவரம் மோகன், மாவட்ட மகளிரணி அ.ரேவதி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் மு.அருண்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பா. இளம்பரிதி, மாநகர கழகத் தலைவர் நா. சிதம்பரநாதன், மாநகர கழகச் செயலாளர் ச. வேலாயுதம், மாநகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பெ. சின்னதம்பி, மாவட்ட இளைஞர் அணித் தலைவர் வீ. கோவிந்தராசு, தோழர் கார்த்தி உள்ளிட்ட தோழர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளைத் தெரிவித்தனர். தோழர் இ.ரவி, பத்ரி ஆகியோரும் கூட்டத்திற்கு வருகை தந்தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியரின் காஞ்சி மாநகர் வருகையை, மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தரை, கழகத் தோழர்கள் சந்தித்து தெரிவித்தபோது, கூட்டத்தை மிகச்சிறப்பாக நடத்துவோம் என்று மகிழ்ந்து உறுதியளித்தார்.