சென்னை,ஜன.28- நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதியை ஒதுக்காததால் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் நிலுவையில் உள்ளது.
ஒன்றிய அரசு போதுமான நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்காததால் ஏற்கனவே 2 மாத ஊதியம் நிலுவையில் உள்ள நிலையில் கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காததால் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2024-2025 பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ.86,000 கோடியை ஒதுக்கியிருந்தது ஒன்றிய அரசு. 100 நாள் வேலை திட்ட நிதி ரூ.1056 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.
பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி தவிர கூடுதல் நிதியை ஒதுக்காததால் தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் பல முறை கோரிக்கை வைத்தும் 100 நாள் வேலை திட்டத்துக்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலை திட்டத்துக்கு ஒன்றிய அரசு மூடுவிழா நடத்த முயற்சி நடைபெற்று வருகிறது.