கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

Viduthalai
2 Min Read

28.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இறுதி செய்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு: எதிர்க்கட்சிகளின் அனைத்து திருத்தமும் நிராகரிப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* இட ஒதுக்கீட்டை ஒழிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சியை காங்கிரஸ் முறியடிக்கும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் திட்டவட்டம்.
* யு.ஜி.சி. புதிய வரைமுறைகள் குறித்து தெலங்கானா மாநில உயர் கல்விக் குழு தலைவர் எதிர்ப்பு. கல்வியாளர்கள் அல்லாதாரை துணைவேந்தர்களாக நியமனம் செய்வது கல்வியின் தரத்தை பாதிக்கும் என கருத்து.
* பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியது பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநில அரசு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2023-2024ஆம் ஆண்டில் பாஜக பெற்ற நன்கொடை 83% அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 2022-2023இல் ரூ.2360 கோடி நன்கொடை பெற்ற பாஜக, கடந்த ஒரே ஆண்டில் ரூ.4,340 கோடி நன்கொடை பெற்றுள்ளது. ரூ.4,340 கோடி நன்கொடையில் ரூ.1,700 கோடி நன்கொடை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
* அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு: எஃப்.அய்.ஆர் கசிவை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் மாநில காவல்துறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் சில பாதகமான கருத்துகளையும் நிறுத்தி வைத்தது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கங்கையில் நீராடுவதால் வறுமை ஒழிந்துவிடுமா?’: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திரிவேணி சங்கமத்தில் நீராடிய சில மணி நேரங்களுக்கு பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம். பாஜக தலைவர்கள் கேமராக்களுக்கு நீராட போட்டியிடுவதாக குற்றச்சாட்டு.
தி ஹிந்து:
* பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்டதாக குற்றச் சாட்டப்பட்ட செபி தலைவர் மாதவி புரி புச்-க்கு பதிலாக புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஒன்றிய அரசு முடிவு. தங்களது நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் பதிவு.
* இந்திய தொழிற்சங்க மய்யத்தின் (CITU) ஆதரவுடன் தொடங்கப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் (SIWU) பதிவுக்கு தமிழ்நாடு தொழிலாளர் துறை ஒப்புதல் அளித்தது.
தி டெலிகிராப்:
* அம்பேத்கரையும், அவர் உருவாக்கிய அரச மைப்பையும் பாஜக, ஆர்எஸ்எஸ் அவமதிக்கிறது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
* குவகாத்தியில் உள்ள காட்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரமேஷ் சந்திர தேகா, நெட் தகுதி அல்லது பிஎச்டி இல்லாமல் ஆசிரியர்களை நிய மிப்பது ஆசிரியர்களின் தரத்தை பாதிக்கும் என கவலை.

.- குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *