புதுடில்லி, ஜன.27 அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ) பெயரில் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஏஅய்சிடிஇ துணை இயக்குநா் பிரசாந்த் காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை:
ஏஅய்சிடிஇ மற்றும் ஒன்றிய கல்வி அமைச்சகம் சாா்பில் பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமனக் கடிதங்கள், அது தொடா்பான தகவல் தொடா்புகளில் மோசடி நடப்பது கவனத்துக்கு வந்துள்ளது. இந்த வகையான மோசடிகள் போலி மின்னஞ்சல் முகவரி, ஆவணங்கள், ஆள்மாறாட்டம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பாதிக்கப்படு வோா் பணத்தை இழக்க நேரிடுகிறது. அதே வேளையில், அது ஏஅய்சிடிஇ-இன் நற் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, தொழில்நுட் பக் கல்வி நிறுவனங்கள் இந்த மோசடி குறித்து அனைத்து மாணவா்கள், ஆசிரியா்கள், ஊழியா்களுக் குத் தெரியப்படுத்தி, விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.