ஆளுநர் விருந்தை விஜய் கட்சியும் புறக்கணித்தது

Viduthalai
1 Min Read

சென்னை, ஜன.27- குடியரசுநாளை முன்னிட்டு ஆளுநர் ரவி அரசியல் கட்சி தலை வர்களுக்கு வைத்த தேநீர் விருந்தில் பாஜக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலை யில் விஜய்க்கு அழைப்பு விடுத்தும் அவர் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆளுனரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இந்த விதை நீர் விருந்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இந்த விருந்தை புறக்கணித்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *