27.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* யு.ஜி.சி. புதிய விதிகள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், நாங்கள் ஒன்று சேர்ந்து போராடுவோம், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் காட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மத்தியப் பிரதேச சாலை கட்டுமானத்தில் ‘ரூ.414 கோடி மோசடி’ நடந்ததாக ஒன்றிய அரசின் தணிக்கை அதிகாரி புகார். போலி மற்றும் / அல்லது நகல் விலைப் பட்டியல்களை சமர்ப்பித்ததாக குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி ஆட்சியில் நாட்டின் ஜனநாயக மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மரபுகள் “மும்மடங்கு அச்சுறுத்தலை” எதிர்கொள்கின்றன. என்று காங்கிரஸ் கண்டனம்.
* பணவீக்கம் காரணமாக ஒடிசாவில் மதிய உணவு திட்டத்தில் ஊட்டச்சத்து உணவு நிறுத்தம். குழந்தைகளுக்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் ‘டால்மா’வுடன் சோறு பரிமாறப்படுகிறது, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சோயா பீன்ஸ் கறி வழங்கப்படுகிறது, புதன் மற்றும் சனிக்கிழமைகளில் முட்டை கறி வழங்கப்படுகிறது.
தி இந்து:
* அரிட்டாப்பட்டி மக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக சுரங்க ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது. நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது என்பது தான் உண்மை; நம்பிக்கைக்கு பாத்திர மாக உள்ள உங்களுக்கு என்றும் நாங்கள் உறுதுணை யாக இருப்போம் என அரிட்டாபட்டியில் முதல மைச்சருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
* மோடி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) கூடுதல் ஒதுக்கீடு இல்லை; ஊதியம் தாமதம். ஊரக மேம்பாட்டு அமைச்சகத்திற்கு ரூ.4,315 கோடி பற்றாக்குறை இருப்பதாக தகவல்.
.- குடந்தை கருணா