மும்பை, ஜன.27 மராட்டிய மாநிலம் நாண்டெட் மாவட்டத்தில் உள்ள மாஹூர் பகுதியில், பக்தர்கள் சிலர் ‘தாக்கூர் புவா’ பயணம் மேற்கொண்டி ருந்தனர். இந்தப் பயணத்தின்போது இவர்கள் கோவில் பிரசாதம் சாப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், பிரசாதம் சாப்பிட்ட சுமார் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் மாஹுர் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது அனைவரின் உடல்நலமும் தேறி வருவதாகவும், விரைவில் அவர்கள் வீடு திரும்புவர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.