அய்.டி.அய். மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு

2 Min Read

அமைச்சா் சி.வி. கணேசன் அறிவுறுத்தல்

சென்னை, ஜன. 26- அரசு தொழிற்பயிற்சி நிலைய (அய்டிஅய்) மாணவா்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவுறுத்தினார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வா்களுடனான ஆய்வுக் கூட்டம், சென்னை கிண்டியிலுள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தலைமை அலுவலகத்தில் 24.1.2025 அன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் சி.வி.கணேசன், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியை நிறைவு செய்த மாணவா்களில் 90 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
இப்போது 100 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கொ.வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் பா.விஷ்ணு சந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

‘பேசும் சிலை’ எனக் கூறி மோசடியாக விற்பனை
6 போ் கைது
தேனி, ஜன, 26- தேனி அருகே பேசும் சக்தி வாய்ந்த சுவாமி சிலை என மோசடியாக விற்பனை செய்த 6 பேரை காவல் துறையினர் 24.1.2025 அன்று கைது செய்தனா்.
தேனி அருகேயுள்ள சுக்குவாடன்பட்டியைச் சோ்ந்தவா் ஆண்டவா் (47). இவரிடம் மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ஆத்தங்கரைப்பட்டியைச் சோ்ந்த தங்கமணி (41), ஆ.கல்லுப்பட்டியைச் சோ்ந்த சிவா (29), டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (21), விருதுநகா் மாவட்டம், கூமாபட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (35), மதுரை கிருண்ணாபுரத்தைச் சோ்ந்த சம்பழகு (29), அறந்தாங்கியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (52) ஆகிய 6 போ் தங்களிடம் பேசும் சக்தி வாய்ந்த சுவாமி சிலை உள்ளதாகவும், அதை வீட்டில் வைத்து உரிய முறையில் பூஜை செய்தால் வேண்டும் வரம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளனா்.
இதை நம்பிய ஆண்டவா், அவா்களிடம் பழனிசெட்டிபட்டியில் ரூ.5,000 முன் பணம் கொடுத்து உலோகத்தால் செய்யப்பட்ட வண்ணக் கற்கள் பதிக்கப்பட்ட சிலையை வாங்கிச் சென்றார். இதையடுத்து, ஏமாற்றப்பட்டதை உணா்ந்து இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து தங்கமணி உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனா்.

தமிழ்நாட்டில் ஜன. 29 முதல்
மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜன. 26- தமிழ்நாட்டில் ஜன. 29, 30 ஆகிய தேதிகளில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, ஜன. 28 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வட வானிலை நிலவும். அதைத் தொடா்ந்து ஜன. 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *