அவமானப்பட்டால்தான் சுயமரியாதையின் அருமை தெரியும்!

Viduthalai
3 Min Read

1929 முதல் சுயமரியாதை மாநாடு நடந்தது. ஏன் சுயமரியாதை தேவை என்பதற்கு சில நாட்களுக்கு முன்பு சுயமரியாதையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெண்கள் குறித்த ஒரு பதிவு

நிகழ்வு 1: 2025 ஆம் ஆண்டு, அலகாபாத் என்று முன்பு அழைக்கப்பட்ட பிரயாக்ராஜ் பகுதியில், கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. உலகப் புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர், பெரும் செல்வந்தர், மியான்மார் சென்று தியானமுறையில் மூழ்கி பவுத்தத்தை தழுவுகிறார். அவரைத் தொடர்ந்து, அவரது அனைத்து குடும்பத்தினரும் பவுத்தத்தை தழுவுகின்றனர்.

அவர் மறைந்த பிறகு, அவரது மனைவி பாவேல் ஜாப்ஸ் பல அறக்கட்டளைகளைத் துவங்கி, உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறார். அவரை மகா கும்பமேளாவிற்கு வந்து கொடை அளிப்பது தருமத்தின் மிகவும் புனிதமான கடமை என்று கதை விடுகின்றனர்.
ஸநாதனமும் பவுத்தமும் ஒன்றுதான் என்று பொய் சொல்லி அவரை அழைத்து வருகிறார்கள். 13 ஆம் தேதி அதிகாலை திரிவேணி சங்கமத்தில் அவரை அழைத்துச் சென்று, கடுமையான குளிரில் காக்க வைக்கின்றனர். அவருக்கு முன்பாகவே, அவரோடு அமெரிக்காவில் இருந்து வந்த யோகா சாமியார் மற்றும் அவரது உதவியாளர்கள் என அனைவருமே முழுக்கு போடுகிறார்கள். காரணம் அவர்கள் பார்ப்பனர்கள்.

இவரை நீண்ட நேரம் கடும் குளிரில் காக்கவைத்து, ஆயிரக்கணக்கான பார்ப்பனர்கள் முழுகி எழுந்து வெளியேறிய பிறகு, இவரையும் மூழ்க அனுமதிக்கின்றனர். இவருக்கு முன்பு மூழ்கி எழுந்தவர்களில், அவரை அழைத்து வந்த ஓட்டுநரும் ஒருவர். காரணம் அவர் பார்ப்பனர். தான் அவமதிக் கப்படுகிறேன் என்று தாமதமாக உணர்ந்த அவர், உடல் நிலையைக் காரணம் காட்டி உடனடியாக பூடானில் உள்ள பவுத்த மடம் ஒன்றிற்கு திரும்பிவிட்டார்.

மற்றவை

நிகழ்வு 2: நித்யா கோஷ் என்ற 27 வயது இளம் பெண் ஒருவர், அவர் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர், திரிவேணி சங்கமத்தில் குளிக்க வருகிறார்.அவரை மூன்று நாட்களாக குளிக்க அனுமதிக்காமல், தொடர்ந்து அவமானப் படுத்துகிறார்கள். காரணம் அவர் 27 வயது வரை திருமணம் ஆகாமல் இருக்கிறார் மற்றும் அவர் ஒரு பெண் என்பதால் குளிக்க அனுமதி இல்லை. இதனால் அவர் மனம் நொந்து, சமூக வலைதளத்தில் அழுதவாறே பேட்டி ஒன்றை கொடுக்கிறார். அதில், “நான் ஸநாதனம் குறித்தும், பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு அதன் புனிதத்தை அறியவும் ஓடோடி வந்தேன். ஆனால் என்னை தண்ணீரில் கால் நனைக்கக்கூட அனுமதி மறுக்கின்றனர். காரணம் நான் ஒரு பெண், அதுவும் திருமணம் ஆகாத பெண். இவர்கள் எனது பெற்றோரையும் தவறாக பேசுகின்றனர். ஒரு பெண் தனியாக எங்கும் செல்லக்கூடாதா? அதுவும் மகா கும்பமேளா போன்ற ஒரு முக்கியமான நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாதா? இதனால் நான் மிகவும் உடைந்துவிட்டேன். நான் மீண்டும் எனது ஊர் செல்கிறேன்” என்று கூறுகிறார்.

மற்றவை

நிகழ்வு 3: நேகா ஷாலினி என்ற பாஜக பெண் பிரமுகர், ஜனவரி 14 ஆம் தேதி தனது எக்ஸ் வலை தளத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிடுகிறார். அதில், “7 ஆண்டுகளாக பாஜகவிற்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து உழைத்தேன். ஆனால் இங்கே பெண்களுக்கு எள்ளளவு மரியாதை கூட இல்லை. எனது சுயமரியாதை முற்றிலும் உடைந்து போனது. மனிதன் சுயமரியாதை இல்லா மல் இருந்தால், அவர் பிணத்திற்குச் சமம். நான் பிணமாக வாழ முடியாது. சுயமரியாதை உள்ள பெண்ணாக சமூகத்தில் தலை நிமிர்ந்து வாழ இனி முயற்சிக்கிறேன். இனியும் நான் பாஜகவில் இருக்க முடியாது. காரணம், எனது சுயமரியாதை பிணமாக கிடந்த எனக்கு உயிரூட்டி விட்டது. சுயமரியாதைப் பாதையில் இனி நான் செல்வேன். எனக்கான பாதை அதுதான்.

ஆகையால், அனைத்துப் பெண் களுக்கும் நான் சொல்லிக்கொள்வது இதுதான்: சுயமரியாதையோடு வாழுங்கள். இல்லையென்றால், பிணத்திற்குச் சமமாக வாழ வைக்கப்படுவீர்கள்” என்று கூறினார்.
மேலே கூறிய மூன்று பேருமே சுயமரியாதை என்ற சுடர் தீண்டியதால், அவர்கள் சுயமரியாதைப் பெருவாழ்வை தேர்ந்தெடுத்தனர். ஆனால் தமிழ்நாடு, இன்றிலிருந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதை இயக்கம் கண்டது. அதனைத் துவக்கியவர் தந்தை பெரியார்.
எல்லாம் பட்டால்தான் தெரியும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *