தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காரைக்கால் வழியாக கடலூருக்கு செல்லும் வழியில் காரைக்காலில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்ட தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புதிதாக தொடங்க விருக்கும் பழ முதிர்ச் சோலை பழக்கடையை பார்வையிட்டார். உடன் காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், துணைத் தலைவர் க.பதிஜெய்சங்கர், மு.பி பெரியார் கணபதி, திமுக மாநில மாணவரணி அமைப்பாளர் பெரியார் ஜவகர், ராஜ்மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர், விடுதலை கனல். மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களும் பங்கேற்றனர். (24.1.2025)
புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் வரவேற்பு
Leave a Comment