மும்பை, ஜன. 25- கைப்பேசி செயலிகள் மூலம் செயல்படும் வாடகைக் காா் நிறுவனங்களான ஓலா, உபா் ஆகிய வற்றுக்கு தேசிய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
ஒரே இடத்துக்கு பயணிப்பதற்கு வெவ்வேறு நபா்களிடம் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த தாக்கீது அனுப்பப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கைப்பேசி செயலி மூலம் வாடகைக் காா், ஆட்டோ பயன்படுத்தும் சேவையை ஓலா, உபா் நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இத்துறையில் இந்த இரு நிறுவனங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஒரே இடத்துக்குப் பயணிப்பதற்கு ஆண்ட்ராய்டு கைப்பேசி மூலம் பதிவு செய்தால் சற்று குறைவான கட்டணமும், ஆப்பிள் அய்போன் மூலம் பதிவு செய்தால் சற்று கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவதாக புகாா் எழுந்தது. அதாவது அய்போன் வைத்திருப்பவா்கள் வசதியானவா்களாக இருக்க வாய்ப்புள் ளது என்ற அடிப்படையில் கட்டணத்தை உயா்த்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடா்பாக பல்வேறு ஊடகங் களிலும் செய்தி வெளியானது.
இது தொடா்பாக தேசிய நுகா் வோா் பாதுகாப்பு ஆணையத்துக்கு பொது மக்களிடம் இருந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு தேசிய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.