மேற்கு வங்க மாநிலத்திற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு முறையாக ஒதுக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் மம்தா குறை கூறியுள்ளார். ஒன்றிய அரசிடம் தாங்கள் பிச்சை எடுக்கவில்லை என்றும், உரிமைக்காக போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தாங்கள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பதும் ஒன்றிய அரசு காலம் காலமாக செய்து வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.
சீமான் ஒளிப்படம் உண்மையா?
பிரபாகரன் உறவினர் மறுப்பு
பிரபாகரனுடன் சீமான் இருக்கும் ஒளிப்படம் போலி என்ற விவாதம்தான் அரசியலின் முதன்மைச் செய்தி. அது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன், சீமான் – பிரபாகரன் சந்திப்பு 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றதாக கூறியுள்ளார். அவர்கள் ஒளிப்படம் எடுத்திருக்க வாய்ப்பு உள்ளது என்றாலும், இது அங்கு எடுக்கப்பட்டதல்ல என்றும் எடிட் செய்யப்பட்டதாக இருக்கவே வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.