கருஞ்சட்டை
சாமியார்களுக்கு எதற்கு உதவியாளர்கள் – அதுவும் குறைந்த வயதுடைய இளம்பெண்கள்.
ஜனவரி இரண்டாம் வாரம் துவங்கி பிப்ரவரி இறுதிவரை அலகாபாத் பிரயாக்ராஜ் பகுதியில் கும்பமேளா நடந்து கொண்டு இருக்கிறது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் பல சாமியார்கள் இங்கே இரண்டு மாதமாக முகாமிட்டுள்ளனர்.
இவர்கள் அந்த அந்தப் பகுதிகளில் இருந்து இளம்பெண்களை கும்பமேளா நடக்கும் காலத் திற்கு மட்டும் உதவியாளர்களாக வாடகைக்கு அழைத்துக் கொண்டு வருகின்றனர்.
இப்படி பல சாமியார்கள் இளம்பெண்களோடு திரிகின்றனர். அந்தப் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாயும், சாப்பாடும் சாமியார் சார்பில் தரப்படுமாம். இந்தப் பெண்கள் கும்பமேளா முடிந்தபிறகு விருப்பம் இருந்தால் சாமியார்களோடு சென்று அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சேவை செய்யலாமாம், இல்லையென்றால் அப்படியே அவரவர் சொந்த ஊருக்குத் திரும்பி விடுவார்கள். இரவும் முழுவதும் கஞ்சா குடித்துவிட்டு முகாம்களில் ஆட்டம், பாட்டமென இருக்கும் காணொளிகள் ரகசியமாக படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
கும்பமேளாவை நினைத்தால் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. பெண்களைக் கூலியாக விலை பொருளாக – ஏன் தாசியாகக்கூட மாற்றும் அவலங்களுக்குப் பெயர்தான் மதவிழாவா?
ஓரிடத்தில் இலட்சக்கணக்கானோர் கூடி நீராடினால், அம்மக்களுக்கு எத்தகைய ஆபத்து காத்திருக்கிறது!
உடல் நோய் மட்டுமல்ல; பல்வேறு இடர்ப் பாடுகள்!
தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் 12 ஆண்டு களுக்கு ஒரு முறை மகாமகம் நடப்பதுண்டு.
ஆயிரக்கணக்கான மக்கள் குளிக்கும் நீரிலேயே 28 விழுக்காடு மலக்கழிவும், 40 விழுக்காடு சிறுநீர்க் கழிவும் (ஆய்வு மூலம் நிரூபணம் – அதுவும் ஒரு மாவட்ட ஆட்சி யரே வெளிப்படுத்திய தகவல்) என்றால் இலட்சக்கணக்கானோர் குளிக்கும் நீரில் கேட்க வேண்டுமா?
மதம் யாருக்குப் பிடித்தாலும் ஆபத்துதான்!