துறையூர், ஜூலை 17– திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை துறையூர் சாமி திருமண மண்டபத்தில் 16-07-2023 அன்று மிக எழுச்சியுடன் நடை பெற்றது.
77 மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். பெரியாரியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
“தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் – வழக்குரைஞர் பூவை.புலிகேசி வகுப்பு எடுத்தார்.
“பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு” என்ற தலைப்பில் – கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வகுப்பு எடுத்தார்.
“தந்தை பெரியாரும் ஜாதி ஒழிப்பும்” என்ற தலைப்பில் – கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சுஎன்னாரெசு பெரியார் வகுப்பு எடுத்தார்.
“சமூக ஊடகங்களில் நமது பங்கு” என்ற தலைப்பில் – பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர் மா. அழகிரிசாமி, திராவிடர் கழக தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வி.சி. வில்வம் வகுப்பு எடுத்தார்கள்.
“தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்” என்னும் தலைப்பில் – வழக்குரைஞர் பூவை.புலிகேசி வகுப்பு எடுத்தார்.
“தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச்சிந்தனைகள்” என்னும் தலைப்பில் முனைவர் மு.சு.கண்மணி வகுப்பு எடுத்தார்.