அய்.அய்.டி.களில், கேம்பஸ் இண்டர்வியூவ்களில், ஜாதிப் பாகுபாடு காட்டப்படுவதாக கடந்த ஆண்டு தீரஜ் சிங் என்பவர் புகார் அளித்திருந்தார். மாணவர்கள் தங்களின் ஜாதிப் பெயரை சொல்லும்படி கட்டாயப்படுத்தப் படுவதாக அதில் கூறப்பட்டது. இதை விசாரித்த என்.சி.எஸ்.சி. ஆணையம், இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டில்லி, மும்பை அய்.அய்.டி. மற்றும் கல்வித்துறை செயலாளருக்கு தாக்கீது அனுப்பியுள்ளது.