சென்னை, ஜன.24 ெசன்னையிலேயே 2 ஆவது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம் மிகப்பெரிய அளவில் தயாராகி வருகிறது. தரையில் இருந்து 20 மீட்டர் ஆழத்திலும், பூமிக்கு அடியில் 320 மீட்டர் நீளத்திற்கும் கட்டப்பட்டு வரும் நிலையம், ஒரே நேரத்தில் 5000 பேர் பயன்படுத்தும் வகையில் அமைகிறது.
தியாகராயர் நகர் சென்னையின் மிக முக்கியமான வர்த்தக பகுதியாக உள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் இங்கு எப்போதுமே இருக்கும். இதனை கருத்தில் கொண்டு இந்த மெட்ரோ ரயில் நிலையம் அமைகிறது. வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையம்
Leave a Comment