கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

23.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை அதலபாதாளத்திற்கு தள்ளிவிட்டனர். திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியில் அளித்த 505 வாக்குறுதிகளில் 389 நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை பட்டியலிட எடப்பாடி தயாரா? என சிவகங்கையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* யு.ஜி.சி. வரைவு விதிகள் குறித்து பாஜக கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பு. தெலுங்கு தேசம், ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சிகளும் அதிருப்தி.
தி டெலிகிராப்
* இந்தியாவின் பொருளாதாரம் வேகப் படுத்தப்பட வேண்டிய நேரத்தில் மெதுவாகச் செல்கிறது. தொழில்துறை வளர்ச்சி, பங்குச் சந்தை மற்றும் ரூபாய் வீழ்ச்சியடைந்து வருகிறது, மேலும் பெரும்பாலான நுகர்வோர் மிகக் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள், இது வளர்ந்த பொருளாதாரமாக மாறுவதற்கான இந்தியாவின் உந்துதலை தடுக்கிறது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
* மோடி அரசாங்கத்தின் ‘பேட்டி பச்சாவ், பேட்டி பதாவோ’ முயற்சி 10 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், பாஜக பாசாங்குத்தனம் செய்கிறது என குற்றம் சாட்டியதுடன், ஆளும் கட்சி “மகள்களைக் காப்பாற்று” என்பதற்குப் பதிலாக ‘குற்றவாளிகளைக் காப்பாற்று’ என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது என மல்லிகார்ஜூன கார்கே சாடல்.
* ‘மேக் இன் இந்தியா திட்டத்தின் தோல்வி’, ‘பெரும் வேலையின்மை நெருக்கடி’ மற்றும் ‘பத்தாண்டு கால ஊதிய தேக்கம்’ ஆகியவற்றை குறிப்பிட்டு ‘அதிகரித்து வரும் வீட்டுக் கடன், மோசமான பொருளாதார விளைவுகள் மற்றும் மந்தமான முதலீடு’ ஆகியவை, நடுத்தர வர்க்கத்தினரை சுருக்கி விட்டது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் பதிவு.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *