புதுடில்லி, ஜன.23- நாடாளுமன்றத்தில் வெளி நாடு வாழ் இந்தியர்க ளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு கூட் டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி., கோரிக்கை
வெளியுறவு விவகா ரம் தொடர்பாக காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள் ஒன்றிய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான சசிதரூர் தலைமையில் நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட் டுள்ளது.அக்குழுவின் கூட்டம் 21.1.2025 அன்று நடந்தது. டில்லி, குஜராத், கேரளா, பஞ்சாப் ஆகிய மாநி லங்களை சேர்ந்த 4 வெளி நாட்டுவாழ் இந்தியர் அமைப்புகள் கலந்து கொண்டன.
கூட்டத்தில், காங் கிரஸ் நாடாளுமன்ற உறுப் பினர் தீபேந்தர் சிங் ஹூடா, “இத்தாலி போன்ற நாடுகளின் நாடாளு மன்றங்களில் வெளி நாடுகளில் வசிக்கும் அந்நாட்டு குடிமக்களுக்கு பிரதிநிதித் துவம் அளிக்கப்படுகிறது அதே போல் இந்திய நாடாளுமன்றத்தில் வெளி நாடு வாழ் இந்தியர் களுக்கு பிரதிநித்துவம் அளிக்கப்படவேண்டும் அதன் மூலம் தங்கள் பிரச்சினைகளை சிறப்பாக எடுத்துவைப்பார்கள் என்று கூறினார்
சசிதரூர் பேட்டி
கேரளாவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் அமைப்பு, வெளிநாடுகள் எதிர்பார்க்கும் திறன்களை இந்திய அமைப்புகள் கற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்தால், திற மையான தொழிலாளர் களின் குடியேற்றம் எளிதாகும் என்றும், சட்டவிரோதமாக வெளி நாட்டுக்கு செல்லும் முயற்சிகள் கட்டுப்படுத்தப் படும் என்றும் தெரிவித்தது.
கூட்டம் முடிவடைந்த பிறகு, சசிதரூர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது
வெளிநாடுவாழ் இந்தியர்களின் எண்ணற்ற பிரச்சினைகள் பற்றி நாடாளுமன்ற நிலைக்குழு விவாதித்தது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் குடியேற்றப் பிரச்சினை குறித்த மசோதா ஒன்றிய அரசின் பரிசீலனையில் இருப்பதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச் சரகம் தெரிவித்துள்ளது. என்று அவர் கூறினார்.