போபால், ஜூலை 18 – மத்தியப் பிரதேசத்தின் டாடியாவை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பள்ளி முடிந்து தன் 19 வயது சகோதரி யுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்களை சிறுமியுடன் படிக்கும் சக மாணவர் கள் 4 பேர் பின்தொடர்ந்து சென்றனர்.
பின்னர் ஒரு வீட்டிற்குள் அவர் கள் இருவரையும் இழுத்துச்சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதனை சிறுமி யின் சகோதரி தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவர் கள் 19 வயது பெண்ணை கட்டி வைத்து கூட்டு பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கினர்.
சம்பவத்திற்கு பிறகு வீடு திரும்பிய 19 வயது இளம்பெண் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் குடும் பத்தினர் அவரை மருத்துவமனை யில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பள்ளி மாணவி காவல் துறையி னரிடம் புகார் அளித்தார்.
இதில் ஒருவன் உள்ளூர் பா.ஜ.க. பிரமுகரின் மகன் என்பது தெரிந் தது. இதனால் அவனை கைது செய்ய காவலர்கள் தயங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த பொது மக்கள் காவல் நிலையத்தை முற்று கையிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதன்பேரில் வழக்குப் பதிந்த காவல் துறையினர் 4 சிறுவர் களை வலைவீசி தேடினர்.
இந்த நிலையில் பா.ஜ.க. பிரமுகரின் மகன் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஒருவனுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் அறிவித்து தேடி வருகிறார்கள்.