கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.1.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசு தான் நிதி உதவி அளிக்கிறது; முதலமைச்சர்கள் தான் பல்கலைக்கழக வேந்தர்களாக இருக்க வேண்டும். சட்டப் போராட்டம் நடத்தி நியாயம் பெறுவோம், மு.க.ஸ்டாலின் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அந்நாட்டு குடிமகன் அந்தஸ்து ரத்து, டிரம்ப் முடிவு. சிவில் அமைப்புகள் வழக்கு தொடருவோம் என அறிவிப்பு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘நீங்கள் எங்களை தூண்டிவிட்டால், நாங்கள் நெருப்பைப் போன்றவர்கள்’: அம்பேத்கர் கருத்து சர்ச்சையில் அமித்ஷா மீது மல்லிகார்ஜுன கார்கே தாக்கு.பெலகாவியில் நடந்த காங்கிரசின் ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான் மாநாட்டில், பி.ஆர். அம்பேத்கர் பற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துகளுக்கு மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

* தமிழ்நாட்டைத் தொடர்ந்து யு.ஜி.சி. புதிய விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!! “தனியார் துறையை சேர்ந்தவர்களை துணைவேந்தர்களாக நியமித்தால், உயர்கல்வி வணிகமயமாக வழிவகுக்கும். உயர் கல்வியில் ஜனநாயகத்தை முடக்கவே, புதிய யுஜிசி விதிகள் வழிவகுக்கும். யுஜிசி விதிகள் திருத்தம் இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரானது,

*உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷாஹி மசூதி ஈத்கா நிர்வாகக் குழு, 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு ஒன்றிய அரசு “வேண்டுமென்றே பதில் அளிக்கவில்லை” என்று குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், “எதிர் பிரமாணப் பத்திரம்/ பதில்/ மனுக்கள்/ சமர்ப்பிப்புகளை தாக்கல் செய்யும் இந்திய ஒன்றியத்தின் உரிமையை மூட வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மகாராஷ்டிராவில் முந்தைய ஏக்நாத் ஷிண்டே அரசு எடுத்த பல முடிவுகள் குறித்து தேவேந்திர பட்னாவிஸ் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்; ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி கலக்கம்.

* தெலங்கானாவில் நடைபெறும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் உள்ளூர் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீதம் ஒதுக்கீடு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு.

தி டெலிகிராப்:

* பீகாரில் அரசு சார்பில் பி.பி.எஸ்.சி. நடத்திய தேர்வில் வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக, தன்னை சந்தித்த மாணவர்களிடம் ராகுல் உறுதி.

* ‘பாஜக ஆட்சியில் உத்தரபிரதேசத்தில் தொடர் காவல் மரணங்கள் நிற்கவில்லை’: ‘அநீதி இழைக்கும்’ காவி கட்சி ‘கடைசி கட்டத்தில்’ இருப்பதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம்.

தி இந்து:

* என்.டி.ஏ. கூட்டணிக் கட்சியான நிதிஷ்குமாரின் ஜனதா தளம் எதிர்ப்பு: யு.ஜி.சி. விதிகளின் வரைவு துணைவேந்தர் தேர்வில் மாநில பங்கைக் கட்டுப் படுத்துவதாக குற்றச்சாட்டு. உயர்கல்விக்கான மாநிலத்தின் சொந்த சாலை வரைபடத்தை பாதிக்கும் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் பேச்சு.
* நரேந்திர மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளைக் கடுமையாகக் கண்டித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வணிகத்திற்கு நியாயமான சூழல் மற்றும் நியாயமான வரி முறை இருந்தால், தொழிலாளர்களின் வருமானம் அதிகரித்து அனைவரும் முன்னேறினால்தான் உண்மையான வளர்ச்சி ஏற்படும் என்று பேச்சு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *