போலி என்கவுண்ட்டரில் 600 பேர் பலி!
லக்னோ, ஜன.22 உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மடத்தின் சாமியாரான ஆதித்யநாத் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்பு கடந்த 7 ஆண்டுகளில் அம்மாநில காவல்துறையின்மூலம் போலி என்கவுண்ட்டர்கள் நூற்றுக்கணக்கில் நடந்துள்ளன. அதில் பலியானவர்களின் எண்ணிக்கை 600க்கும் மேல் இருப்பதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.
குறிப்பாக ஏதேனும் குற்ற வழக்கில் முஸ்லிம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் சிக்கி னால், அவர்களை விசார ணையின்றி என்கவுண்ட்டர் செய்யும் அராஜகப் போக்கை உத்தரப்பிரதேச பாஜக அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், ஷாம்லி மாவட்டத்தின் ஜின்ஜானா பகுதியில் கொள்ளைச் சம்ப வம் ஒன்றில் தேடப்பட்டு வந்த அர்ஷத்தை பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.ஒரு லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச காவல் துறை சமீபத்தில் அறிவித்து இருந்தது. திடரென அர் ஷத்தை நேற்று (21.1.2025) சுட்டுப்பிடிக்க முற்பட்ட போது காவல்துறைக்கும் – அர்ஷத் ஆதரவு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகவும், இதில் அர்ஷத், மஞ்சீத், சதீஷ் உள்ளிட்ட 4 பேர் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டதாகவும் செய்தி கள் வெளியாகியுள்ளன.
போலி என்கவுண்ட்டர்
“முஸ்தஃபா காகா” என்ற முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த வர் அர்ஷத். இவர் மீதான குற்ற வழக்கு தொடர்பாக இதுவரை காவல்துறை எவ்வித தகவலையும் வெளியிட வில்லை. ஆனால் ஜின்ஜானா பகுதி கொள்ளைச் சம்பவத்தில் அர்ஷத்திற்கு தொடர்பு இருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை கூறி, சன்மான அறிவிப்பை வெளியிட்டு, அர்ஷத் மட்டுமின்றி “முஸ்தஃபா காகா” என்ற முஸ்லிம் அமைப் பைச் சேர்ந்த மேலும் 3 பேரையும் என்கவுண்ட்டர் செய்துள்ளது. முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாகவே உத்தரப்பிரதேச காவல்துறை மத பாகுபாட்டுடன் என் கவுண்ட்டர் என்ற பெயரில் படுகொலை செய்துள்ள தாக சமூகவலைத்தளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக இந்த விவகா ரத்தை மறைக்க “முஸ்தஃபா காகா” முஸ்லிம் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் ஜின்ஜானா காவல்துறை ஆய்வாளர் சுனில் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்ததாகவும், அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு வருவ தாகவும் உத்தரப்பிரதேச காவல்துறை கூறியுள்ளது. ஆனால், அவர் எந்த மருத்துவ மனையில் உள்ளார், துப்பாக்கிக் குண்டு காயம் மற்றும் சிகிச்சையின் தன்மை குறித்த விவரங்களை உத்தரப்பிரதேச காவல்துறை மறைத்து வருகிறது. இதன்மூலம் ஜின்ஜானாவில் நிகழ்த்தப்பட்ட என்கவுண்ட்டர் முஸ்லிம் அமைப்பின ரை குறிவைத்து நடத்திய போலி என்கவுண்ட்டர் என்பது நிரூபணமாகியுள்ளது. இதனால் ஷாம்லி மாவட்டத்தில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது.